பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாழ்வார்கள் காட்டும் திருமலைக் காட்சிகள் 103 இடுகு கண்ணினர் இடறு மூப்பினர் ஏக நெடுகு கூனல்வால் நீட்டின உருகுறு நெஞ்சகக் கடுவன் மாதவர்க்கு அருநெறி காட்டுட காணாய்?. இடுகு-இடுகிய; இடம்-துன்பம்; ஏக-செல்ல; நெடுகு க்னல்-மிக்க கூனையுடைய மாதவர். தவசிகள்; என்பது கம்பன் படைத்த சொல்லோவியம். இங்கு இராமன் சீதைக்குப் பல சித்திரகூடமலைக் காட்சிகளைக் காட்டுகின்றான். இன்னும் சில மந்திரிகள் சிலம்பின் நூல். பஞ்சின் நூல் இவற்றை ஆராய்ந்து தெரிந்து அந்தணர்க்கு அளிக்கின்றன. கடுவன்கள் முனிவர்கட்கு மாங்கனிகளை அளிக்கின்றன (33), இங்ஙனம் குறிஞ்சி நிலக்காட்சிகள் வழிவழியாகப் புதிய புதிய கற்பனைப் போக்குகளுடன் இலக்கியங்களில் புலவர்களால் காட்டப் பெற்று அறிவுக்கு விருந்தாக அமைகின்றன. குறிஞ்சி நிலக்காட்சி சித்திரிப்பில் கபிலர் வல்லவர். அவர்தம் சங்கப் பாடல்களில் இக்காட்சிகளைக் கண்டு மகிழலாம். தத்துவஞானியர் இந்த அசித்துக் காட்சிகளிலும் ஆழங் கால்படுகின்றனர். பேயாழ்வார் காட்டுபவை: ஒரு காட்சி இது. பேயாழ்வார் காட்டும் யானையோ ஆதிமூலமே!’ என்று ஓலமிட்டழைத்த கசேத்திரன் மரபுவழி வந்தது போலும். அது புரியும் வழிபாட்டுச் செயலை ஒரு சமத்காரம் பொலியப் பேசுகின்றார் ஆழ்வார். வழிபாட்டுக்குச் செல்லும் அடியார்கள் வாய் கொப்பளித்துக் கை கால் 3." கம்ப-அயோத்தி-சித்திர கூட-30