பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}4 வடவேங்கடமும் திருவேங்கடமும் களை நீரால் தூய்மைசெய்து கொண்டு மலர்களை எடுத் துப் போவது வழக்கமாகும். திருமலையிலுள்ள ஆண் யானையொன்று இந் நெறியை மேற்கொள்ளுகின்றது. இக்காட்சியினை ஆழ்வார், புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து அருவி உகுமதத்தால் கால் கழுவிக் கையால்-மிகுமதத்தேன் விண்ட மலர் கொண்டு விறல்வேங் கடவனையே கண்டு வணங்கும் களிறு. -மூன். திருவந். 70 (புகு-வாயில் புகும்; வாய் பூசுதல்-கொப்பளித் த்ல்; மிகுமதம்-அதிக மதம், விறல்-மிடுக்கு; களிறு-ஆண் யானை) என்ற பாசுரத்தால் காட்டுவர். கன்னத்திலிருந்தும் மத்த கத்திலிருந்தும் பெருகியொழுகும் மத நீரால் வாய் கொப்ப ளிக்கின்றது யானை. அருவி போல் கால்வரை பெருகி வழியும் மதநீரினால் கால் கழுவுகின்றது. இங்ங்னம் திரு. மலையிலுள்ள ஐயறிவு விலங்குக்கும் தன்னை வழிபடும் ஞானத்தைத் தரக்கூடியவன் திருமலையப்பன் என்பது ஆழ்வார் நமக்கு உணர்த்தும் செய்தியாகும். இன்னொரு காட்சி: இன்னொரு யானையின் செய லையும் அதன் முடிவையும் காண்போம். மத யானை போல் எழுந்து மாமுகில்காள்!" (நாச் திரு. 8:9) என்று ஆண்டாள் வருணித்ததை நாம் அறிவோம். திருமங்கை மன்னனோ , கரிய மாமுகில் படலங்கள் கிடந்துஅவை முழங்கிடக் களிறு -பெரி. திரு. 1.2.10