பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாழ்வார்கள் காட்டும் திருமலைக் காட்சிகள் jô7 தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி அளிந்த கடுவனையே நோக்கி-விளங்கிய வெண் மதியம் தாவென்னும் வேங்கடமே! -மூன் - திரு. 5 & (சிலா தலம்-கற்பாறை; மந்தி-பெண்குரங்கு; கடு வன்-ஆண் குரங்கு மதியம்-திங்கள்) என்பது பேயாழ்வாரின் சொல்லோவியம். இப்பாசுரத் தால் திருமலையின் உயர்ச்சி காட்டப்பெறுகின்றது. இயற்கையை நாம் காண்பது ஒரு வகை; நம் மனத் தில் அஃது ஒருவித சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. அது கவிஞர்களிடம் பல்வேறு வித சலனங்களை ஏற்படுத் திப் பல்வேறு கற்பனைக் காட்சிகளைப் படைக்கத் துண்டு கின்றது. கவிஞர்கள் பக்தர்களாக இருப்பின் அவர்கள் பிறிதோர் உலகத்தையே படைத்து விடுகின்றனர்; அதில் தத்துவக் கருத்துகளையும் மிளிரச் செய்துவிடுகின்றனர். இவை இயற்கையைத் துய்ப்பவர்கட்கு எழிலைக் காட்டி மகிழ்விக்கின்றன; முருகுணர்ச்சியையும் தூண்டுகின்றன. பக்திக்கண் கொண்டு நோக்குபவர்கட்கு பரவசத்தை ஏற் படுத்திப் பரமனின் விசுவருப தரிசனத்தையே காட்டி விடுகின்றது. இத்தகைய பாசுரங்களைப் படித்து அதுப விக்கக் கற்றுக் கொள்ளாவிடில் நமக்கு இவ்வுலகில் ஆறு தல் அளிக்கும் பொருளே இல்லை என்று ஆகிவிடும்.