பக்திசாரர் கருத்தில் திருவேங்கடம் 1so பினான். இந்த வரலாற்றை நினைவு கூர்ந்த வண்ணம் திருக்கச்சி நம்பிகள்,: உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்க்கோலால் துக்க-உலகுதன்னை வைத்தெடுத்த பக்கத்தும், மாநீர் மழிசையே வைத்தெடுத்த பக்கம் வலிது.” {புகழக்கோல்-துலாக்கோல்} என்று தனியன் அமைத்துக் காட்டினார். இந்தத் திருத்தலத்தில் அவதரித்தவர் திருமழிசையாழ் வார். இவர் பேயாழ்வாரின் சீடராகிப் பக்திசாரர் என்ற புதிய திருநாமமும் பெறுகின்றார். இவர் அருளிச் செய்த திருச்சந்த விருத்தத்திலும் நான்முகன் திருவந்தாதியிலும்’ திருவேங்கடம் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. இவற்றால் இவர் கருத்தில் திருவேங்கடம் பெற்ற பெருமையை அறிந்து கொள்ள முடிகின்றது. தம்முடைய திருவுள்ளத்தில் எம்பெருமான் பேராமல் நிலைபெற்றிருக் கின்ற இருப்பைக் கூறும் போக்கில், 'திற்பதுமோர் வெற்பகத்து’ 2. திருக்கச்சி கம்பிகள் உடையவரின் ஆசாரியர் களில் ஒருவர். பிறந்த ஊர் பூவிருந்தவல்லி. பிறப் பால் பொன் வாணிகர். கச்சிநகர்ப் பேரருளான னுக்கு ஆலவட்ட கைங்கரியம் புரிந்து வந்தவர். ஆளவந்தாரின் திருவடி சம்பந்தி. திருச்சந்த விருத்தத் தனியன். திருச்சந். விருத்.-65 நான். திரு. 39, 40, 41, A2, A3, 44, 45, 46, 47, 48, 90.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/141
Appearance