பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் கருத்தில் திருவேங்கடம் 11 : எதிரொலித்து நிற்கும் கடிய குதிரையையுடைய கன்வர் கோமான் புல்லி என்பவனுடை காட்டின்கண்ணே சென்ற நம் காதலர்’ என்பது இதன் பொருள். ஞானசம் பந்தப் பெருமானும் கயிலாயத்தை வருணிக்கும்போது, பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள்கூர்ந்த கரிய மிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே —£. 68:2 என்று இத்தகைய களிற்றினை அரவு விழுங்கிய காட்சி யைக் காட்டுவர். கம்ப நாடனும், இடிகொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்துடன் விழுங்கும் கடிய மாசுணம் கற்றறிந் தவரென அடங்கிச் சடைகொள் சென்னியர் தாழ்விலர் தா மிதித் தேறப் படிகள் ஆமெனத் தாழ்வரை கிடப்பன பாராய்', சித்திர கூட மலையை வருணிக்கும் பகுதியில் இத்தகைய அஞ்சத்தக்க காட்சியைக் காட்டுவ்ர்ன். இத்தகைய அச் சத்தை விளைவிக்கும் திருமலையை அடைவதற்கு இரண்டு வழிகளைக் கையாளுகின்றார் ஆழ்வார். ஒன்று திருவேங் கடமுடையானை வாய்விட்டு அழைத்தல், மற்றொன்று கூடல் இழைத்தல்". திருமலைச் சூழலையும், தம் குறிக் 7. கம்ப. அயோ. சித்திர கூடப்-35.