பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. f o வடவேங்கடமும் திருவேங்கடமும் கோளையும் இணைத்து ஆழ்வார் வழங்கும் சொல்லோ வியம். அழைப்பன் திருவேங்கடத் தானைக் காண இழைப்பன் திருக்கூடல் கூட-மழைப்பேர் அருவி மணிவரன்றி விந்திழிய யானை வெருவி அரவொடுங்கும் வெற்பு -நான். திருவந். 39 என்பது திருவேங்கடமுடையானைச் சேவிக்க வேண்டும் என்றும், திருமலையில் நிரந்தரமாக வசிக்க வேண்டும் என்றும் ஆழ்வார் தம் ஆவலைப் புலப்படுத்துகின்றார். திருமலையில் ஒலிக்கின்ற அருவிகளின் மூலம் முத்துகள் உதிர்கின்றன; திருவோணத் திருவிழாவால் திருப்பல் லாண்டு பாடுதல், திருமறை ஒதுதல், நாட்டியம் ஆடுதல் முதலியவற்றால் எழும் ஒலிகள் எம்மருங்கும் கேட்கின் றன. எம்மருங்கும் பக்தர் குழாம்கள் திரண்டு நிற்கின் றனர். இந்தகைய சூழ்நிலை நிலவும் திருவேங்கமலையில் கோயில் கொண்டிருப்பவன் இப்போது ஆழ்வார் நெஞ் சில் புகுந்து அங்கு நிலையாகத் தங்கிவிட்டர்ன். என்றா லும் தம் உள்ளத்தில் தங்குவதற்கு முன்பு திருவேங்கடம் அவனுக்குப் பாலாலயமாக இருந்தது. அதனைக் கண்டு சேவிக்க விருப்பம் கொண்டதாகக் கூறுகின்றார். 8. கூடல் இழைத்தல்: வட்டமாகக் கோடு கீறி அதற் குள்ளே சுழி சுழியாகச் சுற்றும் சுழித்து இரண்டி ரண்டு சுழியாகக் கூட்டிப் பார்க்கும்போது இரட் டைக் கணக்காக முடிவு பெற்றால் கூடுகை; ஒற் றைக் கணக்காக முடிவு பெற்றால் கூடாமை என்று ஒருவகை நியமத்தை ஏற்படுத்திக் கொண்டு குறிபார்த்தல் 'தெள்ளியார் பலர் (நாச். திரு. 4) திருமொழியால் ஆண்டாள் அநுட்டித்தது இது .