பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏莲 வடவேங்கடமும் திருவேங்கடமும் துள்ளன. திருவேங்கட முடையானைக் காண விரும்புவது. போல் இவற்றையும் காண விரும்புகின்றார் ஆழ்வார் (தான். திருவந், 47). பக்தர் குழாம்: ஏழுமலை அப்பனின் இணைத் தாமரை அடிகளில் அன்பு பூண்டு மலர்களைத் தூவி மங்களாசாசனம் செய்துகொண்டு நிற்கும் மக்கட் கூட்டம் வெட்டி வீழ்த்தப்பெற்ற மரங்கள் படுகாடு கிடப்பதைப் போல் கால் பேராமல் நின்ற வண்ணம் உள்ளது. பெரு மானே நின்ற நிலையில் இருக்கும்போது இவர்கட்கு உட் கார எப்படி மனம் வரும்? திருமலை எங்கும் மக்கட் கூட் டமே. இப்படிச் சம்சாரிகளால் நிறைந்து திகழும் தண்ண ருவி வேங்கடம் நித்தியசூரிகட்கும் நிலத்தேவரான வைணவர்கட்கும் வைப்பு நிதியாக இருக்கும்வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு நிற்கும் நெடுமாலும் எல்லோர்க்கும் வைத்தமா நிதியாகத் திகழ் கின்றான். முக்கிய விருந்தினர்கள்: இக்காலத்தில் அமைச் சர்கள், ஊராட்சித் தலைவர்கள், மக்களவை உறுப்பினர் கள் முதலியோர் தங்கள் பதவிக்காலம் தொடர்ந்து நிலை பெற வேண்டும் என்று காணிக்கைகளுடன் ஏழுமலை யான் சந்நிதிக்கு வந்து கொண்டிருப்பதைக் காண் கின்றோம். கள்ள நோட்டு அடிப்பவர்கள் கடத்தல் காரர்கள், கறுப்புச் சந்தைக்காரர்கள் இவர்கள் வருகைக் கும் குறைவில்லை. எல்லோர் மனநிலைகளையும் ஆசைகளையும் அவன் நன்கு அறிவான். கண் மூன்றுடையானும் நான்முகனும் இன்னும் பலதேவர் களும் தங்கள் அதிகாரம் நிலைத்து நிற்பதற்காக மலையனை மலர் அஞ்சலி செய்து வணங்குகின்றனர் (42). இவர்கள் ஏதோ ஒருகால் வந்து போகும் வழக்க முடையவர்கள் அல்லர். நாள்தோறும் வழிபடும்