பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் கருத்தில் திருவேங்கடம் f : 7 என்பது ஆழ்வார் பாசுரம். மெய்வினை நோய் திர்ப்பதற்கு விளக்கமாகத் தீபிகையில் ஒரு வரலாறு காட்டுவார் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள். திருமலைக்கு மேற்குத் திசையில் நந்தன. புரம் என்ற சிற்றுார் ஒன்றில் புரந்தரன் என்ற ஒர் அந்தணானரின் திருக்குமாரன் மாதவன் என்பான் தன் மனைவியாகிய சந்திரரேகையோடு ஒரு மலர்ச் சோலை யில் விளையாடிக் கொண்டிருக்கையில் மாலினி என்ற சண்டாளக் கன்னிகையின் கட்டழகில் ஈடுபட்டு அவளைக் கூடி மனையாளைத் துறந்தான். தன் கைப்பொருள் அனைத்தையும் இழந்து பின்னர் வழிப்பறித்தல் உயிர்க் கொலை முதலான கொடுந் தொழில்கள் புரிந்து பொருள் சேர்த்து அவளுக்குக் கொடுத்து வந்தான். இறுதியாக வறுமையுற்று பல நோய்களையும் பெற்று அவளாலும் துறக்கப்பட்டான். பல பாவங்கள் தொடரப் பித்தன் போல் அலைந்து திரிந்தவன் இத்திருமலையை வந்தடைந் தான். மலையின் சிறப்பால் தனது தீவினையெல்லாம் நீங்கப்பெற்று முன்னைய நிலையை யடைந்தான். திரு மலை எம்பெருமானைச் சேவித்து முத்தியையும் அடைந் ததனால் இம்மலைக்கு வேங்கடாசலம் என்ற திரு நாமமும் ஏற்பட்டதாக ஒரு வரலாறு வடமொழி பிரம் மாண்ட புராணத்திலும் பவிஷ்யோத்திர புராணத்திலும் காரணப்படுகின்றது. திருமலை, நோய் தீர்க்கும் விஷயம் இப்போது அனைவரும் காண்கின்ற உண்மையாகும். ஒரு பாசுரத்தில் ஆழ்வார் தமது அதுபவங்களை வெளியிடுகின்றார். மலை’ என்று வரும் பெயர்களை யெல்லாம் அடுக்கடுக்காய்ச் சொல்லுவதாக ஒரு விநோத முயற்சியால் கொக்குமலை, குருவிமலை, பசுமலை, எருத்துமலை... என்று பலவற்றைச் சொல்லி வருகின்ற அடைவிலே தம்மையும் அறியாமல் 'திருவேங்கடமலை’ என்று தம் திருவாயில் வந்துவிட்டது. இதனையே