பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. குலசேகரப் பெருமாள் காட்டும் திருவேங்கடம்" குலசேகராழ்வார் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியை ஆண்டு வந்த அரசர். திருவஞ்சிக்களத்தில் கெளஸ்துவாம்சமாய் அவதரித்தவர். இவர் சோழ பாண்டியர்களை வென்று தமிழ்நாடு மூன்றுக்கும் தலைமை பூண்ட செய்தி கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன்' (பெரு, திரு. 2:10) என்ற விருதினால் அறியக் கிடக்கின்றது. எம்பெருமான் திருவருள் நோக்கத்தால் திருமாலே சிறந்த தெய்வம் என்று உணர்ந்தவர். அவனுக்கு அடிமையானவர். எம் பெருமானுடைய அநந்த கல்யாண குணக்கடலில் ஆழங் கால்பட்டு நெஞ்சுருகி ஈடுபட்ட இவர் திருமாலின் விபவா வதாரங்களில் இராமகிருஷ்ணாவதாரங்களினிடத்திலும்; அர்ச்சாவதாரத்தில் திருவரங்கம், திருவேங்கடம், திரு. வித்துவக்கோடு போன்ற திவ்விய தேசத்து எம்பெருமான் களிடத்திலும் பெருங்காதல் கொண்டவர். இராமாயணக் காலட்சேபத்தையே எப்போதும் பொழுது போக்காகக கொண்டவர். பாகவதர்களைச் சிறப்பாக உபசரிப்பவர். தமது திருமாளிகைத் திருவாராதனத்தில் எழுந்தருளி

  • சப்தகிரியில் (நவம்பர்-1986) வெளிவந்தது.