பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重盛4 வடவேங்கடமும் திருவேங்கடமும் திருமொழியில் கண்டு அதுபவிக்கலாம்! திருவேங்கடமலை யில் பிறத்தலும் அங்கு ஏதாவது ஒரு பொருளாக இருத்த லும் போதும் எனக் கூறுகின்றார். நாளுக்கு நாள் வளர்ந்து கொழுக்கும் மனித உடம் யெடுத்துப் பிறத்தலை விரும்பாத ஆழ்வார் கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பதற்கு விரும்புகின்றார். இப்படிப் பிறந்தால் அது விரஜா நதியைச் சேர்ந்து வைகுந்தத்தில் பிறந்து வாழ்வதோடு ஒக்கும் என்று கருதினர் என்பது போதரும். இதனால் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி திருவேங்கடத்தானுக்கு ஏதாவது ஒரு வகையில் வழுவிலா அடிமை செய்ய வாய்ப்பாகும் என்று சிந்தித் தார் போலும். இப்படிக் கூறியவரின் சிந்தனை மேலும் சிறகடித்துப் பறக்கின்றது. குருகிற்குச் சிறகுகள் இருப்பது அவர் நினைவிற்கு வருகின்றது. இதனால் அஃது இவற் றின் துணைகொண்டு திருமலையைத் துறந்து வேறிடத் திற்குச் சென்றாலும் செல்லக்கூடும் என்று கருது கின்றார். அங்கனமின்றி அந்த மலையிலேயே பிறத்தல், வாழ்தல், இறத்தல் ஆகிய செயல்களையுடைய மீனாய்ப் பிறந்தாலும் போதுமே என்று எண்ணுகின்றார். தேனார் பூஞ்சோலை திருவேங் கடச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே. -பெரு. திரு. 4:2 என்பனால் தன் அவாவினை வெளியிடுகின்றார். மேலே மீனாய்ப் பிறந்தாலும் போதும் என்று எண் னியவர், மீன் நீர் நிலையைப் பற்றியே உயிர் தரிக்க வேண்டி வரும். அப்படிப் பிறப்பதைவிட எம்பெருமா னுக்கு அந்தரங்கச் சேவகனாகத் தொண்டு புரியும் வாய்ப்