பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப்பெருமாள் காட்டும் திருவேங்கடம் Žiž5 புக் கிடைக்கப் பெற்றால் தான் யாதொரு தடையுமின்றி அர்ச்சக பரிசாரர்களுடன் எளிதில் திருக்கோயிலில் புக் குக் கருவறையை அடைந்து எம்பெருமான் அருகில் நின்று பணிபுரியலாம் என்ற எண்ணம் பளிச்சென்று இவர் மனத் தில் உதிக்கின்றது. அடியார்களின் பெருங் கூட்டத்தில் ஒருவனாக இருந்தாலும் அவர்கள் நடுவில் சிக்கி நெருக் குண்டு உள்ளே புக முடியாமல் தடுமாறும் நிலை ஏற் பட்டாலும் ஏற்படக்கூடும். இங்ஙனமின்றி அப்பெருமா லுக்கு அணுக்கத் தொண்டனாய் அவன் வாய்நீர் உமிழும் பொற்காளாஞ்சியை ஏந்திக் கொண்டு செல்லும் வாய்ப்பு இருந்தால் எளிதில் உள்ளே சென்று விடலாம் என்று கரு துகின்றார். மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தான்உமிழும் பொன்வட்டில் பிடித்துடனே புகப் பெறுவேன் ஆவேனே. -பெரு. திரு 4:8 என்று தன் விருப்பத்த வெளியிடுகின்றார். தான் விரும்பும் அந்தரங்கப்பணி கிடைத்தால் பொன் வட்டில்மேல் மனம் சென்று அதனைக் களவாடும் ஆசை தோன்றலாம்; அதனால் சிறை வாசமும் கிட்டலாம் என்ற எண்ணவோட்டம் எழுகின்றது ஆழ்வாருக்கு. ஆதலால் இயங்குதிணைப் பிறப்பு வேண்டும் என்ப தில்லை; நிலைத்திணைப் பிறப்பு கிடைத்தாலும் போதும் என்று எண்ணுகின்றது. இவர் மனம். வானவர் கோனு டன் பூமாரி பொழியும் இடமாதலால் அத்திருமலையில் மலர்ப்பணியாற்றும் மரமாகவேனும் இருக்கலாமே என்று கருதுகின்றார். தேனின் இனிய பிரானே செண்பகச் சூட்டவாராய்' (பெரியாழ். திரு. 27: 1) என்ற பெரி