உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வடவேங்கடமும் திருவேங்கடமும் யாழ்வார் வாக்கால் எம்பெருமான் திருவுள்ளத்திற்குச் சண்பக மலர் மிகவும் உகப்பாதலை அறிகின்றார். உடனே, பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துச் செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே. -பெரு. திரு 4:4 என்று தன் ஆசையை வெளியிடுகின்றார். இந்த ஆசைக்கும் தடை தோன்றுகின்றது. திரு. மலைக்கு வருகின்ற செல்வர்களுள் யாரேனும் ஒருவர் சண்பக மரத்தையும் பெயர்த்துக் கொண்டேகின் திரு. மலையின் வாழ்க்கையை இழக்க நேரிடுமே என்ற ஊகம் கால் கொள்ளுகின்றது. இவர் சிந்தனையில். ஒன்றுக்கும் உதவாத புல்பூண்டு செடி கொடியின் புதராக - தம்பக மாக - வேனும் இருந்தால் தனக்கு யாதொரு தீங்கும் நேரிடாது என்று எண்ணி, எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலையில் தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே. -பெரு, திரு. 4:5 என்று தன் விருப்பத்தைப் புலப்படுத்துகின்றார். சிறிது சிந்தித்த அளவில் இதற்கும் ஒர் ஆபத்து உண்டு என்பதாக எண்ணுகின்றது. இவர்தம் திருவுள்ளம். காட்டுத் துறையினர் செடி கொடிகளை அடிக்கடிச் சோ தி க் கு ம் இயல்புடையவராதலால், அவர்கள் தம்பகத்தைக் களைந்தெறிந்திடக்கூடும் எனவும் அது தானே விரைவில் தீர்ந்தொழியக் கூடும் எனவுமான எண்ணம் முகிழ்க்கின்றது இவர் திருவுள்ளத்தில். மலை யின் ஒரு பகுதியாக இருப்பின் என்றும் மாறாத ஒரே நிலையில் இருக்கலாமே என்ற எண்ணம் ஒடுகின்றது. உடனே,