பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் காட்டும் திருவேங்கடம் 133 என்பது அவர்தம் விண்ணப்பம். இப் பாசுரத்தை அடி யொற்றியே திருமால் கோயில்களின் கருவறையின் வாயிற்படி குலசேகரன்படி என்று இவர் பெயரையிட்டு வழங்கும் சம்பிரதாயமும் இருந்து வருகின்றது. இந்தப் பேற்றுக்கும் குந்தகம் விளையினும் விளைய லாம் என்று எண்ணுகின்றார் ஆழ்வார். திருமலைக்கு வரும் பக்தர்களுள் செல்வராக இருக்கும் எவரேனும் ஒருவர் சந்நிதிக்குள் கருங்கல் படி இருப்பது திருவேங்கட முடையனது செல்வ நிலைக்குத் தகாது என்றும், தங்க வாசலுக்கு உட்புறமுள்ள வாயில் கருங்கல்லாக இருப்பது சிறிதும் கூடாது என்றும் கருதித தங்கத் தகட்டால் மூடுவ தற்கும் முன்வரலாமன்றோ? அப்படிச் செய்தால் திரு வேங்கட அப்பனின் திருமுக மண்டலச் சேவையை இழக்க நேரிடுமே. ஆகையால் படியாய்க் கிடப்பதும் பாங்கன்று என்று அறுதியிடுகின்றார். பின்னர் எந்தப் பிறவியை வேண்டுவது என்பது தோன்றவில்லை. அவன்தான் வணங்க அவன் அருளின்றி முடியுமா? முடியாதன்றோ? இந்த ஞானம் தம் உள்ளத்தில் தோன்றவே தாமாக ஒரு பிறவியையும் வேண்டிக் கொள்ள விரும்பாதவராய், எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே. -பெரு. திரு. 4:10 என்று சொல்லித் தம் ஆசைக்குத் தலைக்கட்டி விடுகின் றார். இந்தப் பெருமாள் திருமொழியை அடியொற்றியே முத்தமிழ்க் கவி வீரராகவ முதலியார், மாடாக நிழற்றுசெழு மரனாகத் தவச்சிறிய வ.தி.-9