உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. ஆண்டாளும் திருவேங்கட முடையானும் இந்த உலகில் ஞான பக்தி வைராக்கியங்களுடன் திகழ்ந்து முக்தியடைந்த பெரியோர்கள் பலர். இவர்களுள் உயர்நிலையில் நின்று புகழ் பெற்றவர்கள் இருடிகளும் ஆழ்வார்களும் என்று பெரியோர்கள் பணிப்பர். இவர் களுள்ளும் இறையன்பில் ஒருவரோடொருவரிடையே ஏற். றத் தாழ்வு உண்டு என்ற பெற்றியை உரை மன்னன் பெரியவாச்சான் பிள்ளை எடுத்துக் காட்டி மிகத் தெளி வாக விளக்குவர். இருடிகளையும் ஆழ்வார்களையும் ஒப்ப நோக்கினால் இருடிகளின் பக்தி அணுவளவாகவும் ஆழ்வார்களின் பக்தி மலையளவிலும் காணப்பெறும், அங்ங்ணமே மற். றைய ஆழ்வார்களின் பக்தியும் பெரியாழ்வார்களின் பக் தியும். மற்றையோர் பக்தி அணுவளவாகவும், பெரியாழ் வார் பக்தி மலையளவாகவும் தோற்றம் அளிக்கும். பெரி யாழ்வாரின் பக்தியையும் அவர்தம் அருமை மகள் ஆண்

  • சப்தகிரி (டிசம்பர்-1986)யில் வெளிவந்தது.

1. திருப்பாவை வியாக்கியாமை மூவாயிரப்படி அவ தாரிகை காண்க.