பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாளும் திருவேங்கடமுடையானும் 135 மேகங்களோ வாய்ப்பூட்டு போட்டாற்போல் வார்த்தை சொல்லாமல் வாளா இருக்கின்றன. இதனால் தன் ஆற்றாமையின் கனத்தைச் சொல்லி வருந்து கின்றாள். காமத்தி யுள் புகுந்து கதுவப்பட் டிடைக்கங்குல் ஏமத்தோர் தென்றலுக்கு இலக்காய் நான் இருப்பேனே. -நாச், திரு. 8:3 (கதுவப்பட்டு-அறுக்கப்பட்டு; க ங் கு ல்-இரவு: இடை ஏமம்-நள்ளிரவு) காமத்தி என்னுள் புகுந்து என்னை வாட்டுகின்றது. நள்ளிரவில் ஒரு தென்றல் காற்றுக்கு நான் இலக்காகி எவ்வாறு இருப்பேன்? தென்றல் காமத்தீயிற்குத் துணை யாக இருந்து நோயை அதிகப்படுத்துகின்றதே. உள்ளே காமத்தி; வெளியே தென்றற் காற்று. இருதலைக் கொள் விக்கிடையில் அகப்பட்ட எறும்புபோல் இவற்றுக் கிடையே தடுமாறிக் கிடக்கின்றேன்' என்று வருந்து கின்றாள். 'எம்பெருமானைப் பிரித்து பட்ட துக்கத்தினால் என் மேனியழகு கெட்டது. உடல் இளைத்தமையால் வளையல்கள் கழன்றொழிந்தன. நானும் நெஞ்சு தளர்ந்து உறக்க மொழிந்து கிடக்கின்றேன். இந்த நிலையில் எம் பெருமானின் திருக்குணங்களை எங்ங்ணம் போற்றி உயிர் காத்திருக்க முடியும்? எளியாரை எல்லாரும் கைவிடுவது உலக இயல்பேயன்றோ? ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம் எளிமையால் இட்டென்னை ஈடு அழியப் போயின வால். -நாச். திரு. 8:3