பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாளும் திருவேங்கடமுடையானும் 1.37 இரண்டாவது செய்தி : வான் கொண்டு கிளர்த் தெழுந்த மேகங்களே, எம்பெருமான் என்னிடத்துப் பறித்துப்போன கைவளையல்களைத் திருப்பிக் கொடுப்பு தாக இருந்தால் என் நிலையைத் தெரிவியுங்கள்' என்பது. இரண்டாவது செய்தி, தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமின்ே. -நாச். திரு. 8, 5. என்பதாகும். அவனுடைய மன ஈடுபாட்டை அறிந்து கொண்டு தன் நிலையைத் தெரிவிக்குமாறு வேண்டுகை என்ற குறிப்பும் இதில் புலனாகின்றது. சாற்றுமினே: 'அவன் தரிலும் தருகின்றான், தவிரிலும் தவிருகின்றான்; நீங்கள் அறிவித்துப் போருங்கள்’ என்ற வியாக்கியான வாக்கியமும் கண்டு மகிழத்தக்கது. அன்றியும், "அவனு டைய திருவுள்ளத்தைக் நீங்கள் அறிந்து கொண்டு அதனை என்னிடம் வந்து சாற்றுங்கள்' என்று கொள்வதற்கும் தடடிலலை. மூன்றாவது செய்தி : தன்னுடைய நலன்களை யெல்லாம் பறித்துச் சென்ற நாரணற்குத் தன்னுடைய நடலை நோயைத் தெரிவிக்க வேண்டும் என்பது மூன்றா வது செய்தியாகும். இச்செய்தி தாங்கிய பாசுரம்: சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்! மாவலியை நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்! உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்தென்னை நலங்கொண்ட நாரணற்குஎன் நடலைநோய் செப்புமினே. -நாச் , திரு. 8:6