பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

墨霧瓣 வடவேங்கடமும் திருவேங்கடமும் !சலம்-கடல் நீர்; நிரந்து ஏறி-பரவியிருந்து; உலங்கு-பெருதுளும்பு (பெருங் கொசுக்கள்); நலம்-பெண்மைக்குரிய நாண் முதலிய குணங்கள்; நடலை நோய்-நிற்பது, இருப்பது, விழுவது, எழுவதாய்ப்படுகின்ற நோய்) பாசுரத்தின் பொருள் தெளிவு. சில சொற்றொடர் கவின் தயம் தம் மனத்தைக் கவர்கின்றது. மாவலியை ............பொழிவீர்கான்': பயனையே கருதுபவர்களான (பிரயோஜநாத்தரபரர்களான தேவர்களுக்காகத் தன்னை இாமன மானியாக்கிக் கொண்டு இரந்து மூன்றடிமண் பெற்ற பெருமான் எழுந்தருளியிருக்கின்ற தேசத்தில் வாழும் நீங்கள் பயன் கருதாத எனக்காகக் (அநந்யப் பிரயோஜநையான எனக்காகக்) காரியம் செய்ய வேண் 1.ாலோ: எம்பெருமான் ஒர் அசுரன் பக்கல் சென்று காரிகம் செய்ததுபோல் நீங்களும் ஒர் அசுரன் பக்கல் சென்று காரியம் செய்ய வேண்டும் என்றா நான் சொல்லுகின்றேன்? இல்லையே: உடையவன் பக்கலிலே அன்றோ உங்கனைப் போகுமாறு வேண்டுகின்றேன்?’’ என்ற குறிப்பு இதில் புலப்படுவதைக் கண்டு மகிழலாம். ஏறிப்பொழிவீர்காள்: 'சாய்கரத்தை உயர வைத்துத் தண்ணீர் வார்ப்பாரைப்போலே, காணவே விடாய் கெடும்படி உயரவேறி வர்ஷிக்கிறி கோளிறே; அவன் வர்த்திக்கிற இருக்கிற தேசத்திலே அவனோடே உங்க சூக்கு ஒரு சம்பந்த முண்டானால் அவன் ஸ்வபாவமுண் டாக வேண்டாவோ?’ என்ற பெரியவாச்சான் பிள்ளை யின் வியாக்கியான வாக்கியம் கண்டு அ நுபவிக்கத் தக்கது. ஆனக்காத யாம் செய்யத் தக்கது என்ன?'வென்று அந்த .ேகேங்கள் வினவ, 'நலங்கொண்ட நாரணற்கு என் நட லைநோய் செப்புமினே'.