பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாளும் திருவேங்கடமுடையானும் 蓬蓬 அருளமாட்டாரோ?' ' நா. திரு. 8:8) என்று தான் ஏங்கி நிற்கும் நிலையைப் புலப்படுத்துகின்றான். இதன் பின்னர் அவள் பேசும் பேச்சுதான் தம் உள்ளத் தில் ஆழப்பதிகின்றது. இஃது எம்பெகுமான் திருஅன்னத் தைக் கட்டாயம் தொடத்தான் செய்யும். அன்னையார் மேகத்தை விளித்துப் பேசுகின்றார். மதயானை போல்னழுத்த மாமுகில்காள்! வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்கான்! பாம்பணையான் வார்த்தை யென்னே! கதியென்றும் தானாவான் கருதாதோர் பெண்கொடியை வதைசெய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே. -நாச், திரு. 8:9 (புதி-இருப்பிடம் தான்-எம்பெருமான், வதை கொன்ல; மதியார்-மதிக்க மாட்டார்கள்). பாசுரத்தின் பொருள் வெளிப்படை. எனினும் சொற் தொடர்கள் குறிக்கும் தொனிப் பொருள் நம் இதயத்தில் ஒலிக்கின்றது. குக்கிராமமே குடியிருப்பானவர்கள் வத் தேறிகளாய்த் திருநாள் சேவித்து விட்டுப் போவது போலன்றியே எம்பெருமான் திவ்விய தேசத்திலேயே நிரந்தரமான வாழ்வு பெற்றிருப்பதால் செருக்கியிருக்கும் நிலைகண்டு மதயானை போல்எழுந்த மாமுகில்கான்' என விளிக்கின்றாள். இதற்கு முன்னுள்ள பாசுரத்தில் கார் காலத்தில் வருவதாகச் சொல்லிப் போன எம்பெரு மான் குறிப்பைப் புலப்படுத்தும் வகையில் கார் காலத் தெழுகின்ற கார்முகில்காள்!" என்று விளித்தவளன்றோ? ஈண்டு பாம்பணையான் வார்த்தை என்னே!’ என்பதில் திருவனந்தாழ்வானிடம்.