பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கை மன்னன் கருத்தில் வேங்கடம் 盖墨置 வண்துவராபதி ஆகிய தலங்களைச் சேவித்து மங்கனா சாசனம் செய்துகொண்டு சென்று காண்டற்கரிய" சிங்கவேள் குன்றத்திற்கு வருகின்றார். நின்ற செந்தி மொண்டு சூறை நீள்விகம்பூடு இரிய (1.7:5), தோய்ந்த தீயால் விண் சிவக்கும் (1.7:8), கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய் (1.7:7) என்று சிங்சு வேள் குன்றத்தின் நிலவெம்மையைப் பேசித் தீர்த்த ஆழ்வாரை நோக்கி "ஆழ்வீர் தெய்வமல்லால் சொல்ல வொண்ணா (1, 7:4) என்றும், சென்று காண்டிற்கரீய’ (1 7:5) என்றும் சொல்லிக் கொண்டு சிங்கவேள் குன்றத் தில் ஏன் துவள்கின்றீர்? தீர்த்த நீர்த்த ம் சோலைசூழ் திருவேங்கடம் (1.8:4) தெழிகுரல் அருவித் திருவேங்கடம்" (திருவாய் 3.3:t), சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’ (டிெ 3.3:2) என்று நெஞ்சு குளிரப் பேசும்படியான ஈரத்தமிழ் நடையாடுதற்கு எல்லை நிலமான திருவேங்கட மாமலையில் நாம் அனைவர்க்கும் எளிதாகச் சேவை சாதிக்கின்றோம். இங்கே வந்து தொழுது ஆனந்த மடைவீர்” என்று அருளிச்செய்ததாகத் தம் உள்ளுணர் வால் அறிந்து வேங்கடம் அடைகின்றார். திருவேங்கடம் அடை நெஞ்சமே!’ என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகத் தம் நெஞ்சத்தை ஆற்றுப்படுத்துகின்றார். இந்த மலையையும் இங்கு எழுந்தருளியிருக்கும் எம் பெருமானையும் நான்கு திருமொழியால் (பெரி.திரு. 1. 8; 1.9; 1.10; 2.1) மங்களா சாசனம் செய்துள்ளார். இந்த நான்கு திருமொழியாலும் மங்கை மன்னன் கண்ட வேங்கடத்தையும் அவர் சிந்தையில் கோயில் கொண்ட திருவேங்கடவாணனையும் காண்போம். இந்த வேங்கட வாணன் நம்மாழ்வாருக்கு எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதமாக இருக்கின்றான். வேங்கடத்தின் சூழ்நிலை அழகு என்பது ஒரு தத்துவம் எங்கெங்கெல்லாம் அழகு ததும்பி வழிகின்