பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv. வரசர்களின் காலத்தில் திருமலையில் ஏற்பட்ட கல்வெட் டுகளில் பூர் வைஷ்ணவர்கள் இரட்சை', 'இந்நிபந்தம் செய்தது ரீவைஷ்ணவர்களோம் என்றிங்கனம் காணப் படுவதனாலும் சிலப்பதிகாரத்தில் உள்ள முற்கூறிய பகுதி இடைச் செருகலன்றென்று தெளியலாகும்-என்று பேரா சிரியர் ரெட்டியாரவர்கள் அசைக்க முடியாத அத்தாட்சி களைக் காட்டி அறுதியிட்டிருக்கிறார். ஐந்தாவது கட்டுரையில்-நாலாயிரம் எனப்படும் ஆழ்வாரருளிச் செயல்களின் நான்கு பகுதிகள், இருபத்து நான்கு பிரபந்தங்கள், அவற்றின்கள் உள்ள பாசுரங் களின் எண்கள். அப்பாசுரங்களில் தொண்டரடிப் பொடி களும் மதுரகவிகளும் தவிர மற்றுள்ள ஆழ்வார்களும் ஆண்டாளுமாகிய இப்பதின்மார் பாடிய திருவேங்கடப் பாசுரங்களின் எண்ணிக்கை இவற்றைக் குறிப்பிட்டு, ஏழாவது தொடங்கிப் பன்னிரண்டாம் கட்டுரை வரை யில்-முறையே முதலாழ்வார்கள் மூவர், திருமழிசைப் பிரான், குலசேகரப்பெருமாள், ஆண்டாள். திருமங்கை மன்னன், சடகோபர் ஆகியவர்கள் திருவேங்கடமுடை யானை அநுபவித்தருளிய பாசுரங்களை எடுத்து அவற்: றுக்கு, எழுநூறாண்டுகளுக்கும் முன்பே நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை முதலிய ஸர் வஜ்ஞர்களான ஆசாரியசிகாமணிகள் தேனும் பாலும் கன்னலும் அமுது, மாக அருளிச்செய்த உரைகளையே நயம்பட எடுத்துக் காட்டி, தாமும் மிக மிக அவற்றில் ஈடுபட்டுத் தமக்குள்ள *சடகோபன் பொன்னடி என்ற உண்மையான விருதுக் குச் சேரும்படி, தமக்குத் திருவேங்கடமுடையான் பக்கலில் உண்டான பக்தியை வாசகர்களுக்கும் மிகமிக உண்டாக் கியிருக்கிறார் பேராசிரியர் ரெட்டியாரவர்கள். பதின்மூன்றாவது தொடங்கிப் பதினெட்டாவது: கட்டுரை வரையில்-திவ்வியகவி பிள்ளைபெருமாளை யங்கார் காட்டியருளும் திருமலைக்காட்சிகள், வேங்கட.