பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கை மன்னன் கருத்தில் வேங்கடம் 翼盛梦 تم என்பது பாசுரம். திருமங்கையாழ்வார் திருமலைக்கு வரும்போது அகன் அழகு அவர் உள்ளத்தைக் கொள்னை கொள்ளுகின்றது. அதனைப் பல பாடல்களில் குறிப்பிடு கின்றார். எல்லா உலகங்களுக்கும் திலகம் போன் : விளங்குவது திருமலை என்கின்றார் ஒரு திருப்பாசுரத் தில். அதே பாசுரத்தில் மணம் மிக்க மலர்கள் நாதும் விசாலமான சோலைகளால் சூழப்பட்டது (1.8:9) என்றும் செம்புகின்றார். திருமலை தீர்த் தங்கள் தினத்தி இடம். எண்ணற்ற தீர்த்தங்கள் அங்கு உள்ளன. 'விண்ணினின்றும் மழை நீரும் பணி நீரும் பெய்யப் பெற்ற தும் காளமேகங்கள் லத்துபடியும்படியான உயர்ந்து ஓங்கி யிருக்கின்ற சோலைகளால் சூழப்பெற்றதுமான மலை’ (1.8:7) என்று குறிப்பிடுவாா, மேலும் இந்த மல்ைலை, தேனேய் பூம்பொழில் திருவேங்கடமா மல்ை (3.9:3), என்றும், வேயேய் பூம்பொழி சூழ் விரையார் திருவேங் கடம்" (1.9:1) என்றும், குன்ஹேய் மேகம் குளிர் மாமலை வேங்கடம் (1.8:3) என்றும், நிலத்தோய் நீள்முகில்சேர் தெறியார் திருவேங்கடம் (1. 9:4), கரிசேர்பூம்பொழில் சூழ் கனமாமலை (1, 9:7) என்றும், கோல்தேன் பாய்த் தொழுகும் கமலச்சுனை வேங்கடம் (1, 9:9) என்றும் பலவாறு சோலைகளையும் சுனைகளையும் காட்டுவார். வேங்கடவாணன் : திருமலையின் இயற்கை எழிலி லும் மலையின் உச்சியிலும் ஈடுபட்ட திருமங்கை யாழ்வார் மலைமீது திருக்கோயில் கொண்டுள்ள மாலவன் மீதும் தம் உள்ளத்தைப் பறி கொடுத்துப் பல படியாகப் பேசுகின்றார். திருமலையப்பன் கிருதயுகத்தில் வெளுத்த நிறத்தையுடையவன்; கலியுகத்தில் கறுத்த நிறத்தை யுடையவன்; துவாபர யுகத்தில் சாமள நிறத்தையுடைய வன் என்கின்றார். இவர்களைப் பலன்களை விரும்பாத சொரூபத் தெளிவுடைய பரமைகாந்திகள் வழிபடுகின்ற னர் (1. 8:2) என்பார்.