பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கை மன்னன் கருத்தில் வேங்கடம் 15 உயிரைக் குடித்த திறலுடையவர் (1.8:5). ஐம்பெரும் பூதங்களாக நின்று ஆயிரம் திருப்பேர்களால் பேசப்பட நின்ற பெம்மான் (1.8:7), தித்திய சூரிகட்குத் தலைவன்: பிராட்டியாருக்கு நாயகன் (1.8:8); திருவெட்டெழுத்து மந்திரத்தை அதுசந்திப்பவர்களின் பிறப்புறுத்துத்திரு நாட்டில் நித்திய கைங்கரியச் செல்வத்தை அனிப்பவர். {1. 8:9). இப்படிப்பட்ட எம்பெருமான் எழுந்தருளியிருக் கும் இடமாகிய திருவேங்கடம் என்ற திவ்விய தேசத்தை அடையுமாறு ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகத் தம் நெஞ்சுக்கு உபதேசிக்கின்றார் ஆழ்வார். பாவங்களைப் போக்குமாது வேண்டுதல் ஆழ் வாரின் திருவுள்ளமும் அலர் விருப்பத்திற்கு இசைய, இரு வருமாகத் திருவேங்கடமுடையானை அதுபவிக்கத் திரு மலையில் வந்து புகுந்தனர். எல்லாவற்றுக்கும் இறை வனாய், எல்லாவித உறவுகளாகவும் திருமால் இங்கு நிரந்தரமாக இருப்பதால் தம்முடைய விருப்பங்கன் எல் லாம் இங்கே நிறைவேறும் என்ற மிகுந்த பாரிப்புடன் வந்த ஆழ்வாருக்கு திருமலையப்பன் முகம் காட்ட வில்லை; ஆழ்வார் மிகவும் திருவுள்ளம் தொந்து எல்லாம் அறிந்தவனாய், எல்லாவித ஆற்றலுடையவனாய்த் தமக்கு வகுத்த நாதனாய், பெரிய பிராட்டியாரை ஒரு தொடிப் பொ முதும் விட்டுப் பிரியாதவனாய் இருக்கும் எம்பெரு மான் இப்போது தம்மை அலட்சியம் செய்திருப்பதற்குத் தம்முடைய மிகுந்த பாவங்களே காரணமாக வேண்டும் என்று கருதி அவற்றைப் போக்க வேண்டும் என்று பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக்கொண்டு திருமலையப் பன் திருவடிகளிலே விழுந்து சரண் புகுகின்றார். அப்பெரு மான் திருவுள்ளத்தில் இரக்கம் பிறக்குமாறு பாசுரம் பேசுகின்றார். அவற்றைக் காண்போம். 'திருமலையில் எழுந்தருளியுள்ள பெருமானே, நீயே எல்லாவித உறவுகளுமாக இருக்க, அது செய்