பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கை மன்னன் கருத்தில் வேங்கடம் 麗あ就 வந்து விழுந்து விட்டேன்’ (1.8:4). அதிபாதகம், உப பாதகம், மகா பாதகம் என்னும்படியான பாவங்கள் எப் படிப் பட்டவையாயினும் செய்யுங்கால் சிறிதும் மல் செய்து விட்டேன். பின்னர் அப்பாவங்கட்கு நோக் கூடிய பலன்களைக் கேள்வியுற்று, என்ன செய்தோம்!” என்ன செய்தோம்! என்று வருத்தத்தால் குன்றிப் போனேன். நாராயணா' என்று நாலெழுத்துச்சொல்லி உன்னைத் துதிக்கவும் முடியாத ஆற்றலற்றவனானேன். ஆயினும் தின்னடிக்கே வந்து புகுத்தேன்’ (1.8:5). "உடல் ஐம்பெரும் பூதங்களாலானது. மண்ணையும் மணலையும் கல்லையும் சேற்றையும் கொண்டு வீடு கட்டு மாப்டோலே ஐந்து பூதங்களைக்கொண்டு இந்த ஊனாலான பிண்டம் உண்டாக்கப் பெற்றது. தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும், வேண்டா நாற்ற மிகு உடல் (திவ்விய கவி) என்றவாறு புண்கள் நிறைந்து கிடக்கும் இந்தத் திருமேனி! இப்படிப் பட்ட உடலில் அகப்பட்டுத் துவண்டு போனேன்: இனி எந்த ஒர் உடலையும் ஏற்க ஆற்றலின்மையால் பிறப்பு இறப்புத் தொடர்கட்கு அஞ்சி நின் திருவடிவாரத்தில் வந்து விழுந்தேன், (1.8:6) ့ီ’ မှုံ 'அறிவு நடையாடாத இளம்பிராயத்தில் பல தவ றான செயல்களில் ஈடுபட்டேன்; குமரப் பருவத்தில் மாதர்க்காகத் தேடித் திரிந்து அலைந்து சதிர்கேடனா னேன். போனகாலம் பழுதாய்ப் போனாலும் இனியாகி லும் நல்வழியில் சென்று உய்யலாம் என்று நின்னைய டந்தேன்' (1.8:7). "பல பிறப்புகள் உண்டாகும் வித்துக்களாகப் பல செயல்களைச் செய்தேன். இங்கனம் பல பிறவிகளில் உழன்று வந்த அடியேன், யாத்ருச்சிக சுக்ர விசேடத்தாலே நின்னைக் காணவேண்டும் என்ற ஆசை பிறந்தது இந்தப் பிறவியில், அதனால் நான் நின்ற நிலை மிகவும் டொல்லாதது என்று என் நெஞ்சில்