பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கை மன்னன் கருத்தில் வேங்கடம் 155 பாவமாகவே ஆயிற்று: பரமபத பிராப்திக்குத் தகுதியற்று வனாய் விட்டான். சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன்' என்று பாவிகளில் முதல்வனான சிசுபாலன் தான் உள்ள வரையிலும் பாவமே செய்து போந்தாலும் முடிவில் நல்ல பேறு பெற்றவனாதலால் அவனுடைய பாவமெல்லாம் புண்ணியமாகவே ஆயிற்று. ஆக இப்படிப் பாவம் செய்து புண்ணியசாலி ஆவதும், புண்ணியம் செய்து பாவியா வதும் உண்டாயினும் 'பாவமே செய்து பாவியானேன்'அதாவது தசரதனைப் போலே புண்ணியத்தைச் செய்து பாவியானவனல்லேன்; சிசுபாலனைப் போலே பாவத் தைச் செய்து புண்ணியான்மாவாக ஆனவனும் அல் லேன் செய்ததும் பாவம், ஆனதும் பாவியாக' என்றது 劣育鑫了ó。 இங்ங்ணம் பலவாறு முறையிட்டு ஒரு தடவைக்கு ஒன் பது தடவையாக ‘அடியேனை ஆட்கொண்டருள் வேனும், அடியேனை ஆட்கொண்டருள வேணும்' என்று பிரார்த்திக்கின்றார். ஆழ்வார். 3. அகப்பற்று, புறப்பற்றுகளைப் போக்குமாறு: வேண்டுதல்: அகப்பற்று புறப்பற்றுகள் கழிந்து பர பக்தி பெருகினாலன்றோ கைங்கரியப் பிராப்தி ஏற்பட வழி உண்டாகும். அதனால் இருவகைப் பற்றுகளைப் போக்க வேண்டும் என்றும் பக்தி சம்பத்தைத் தந்தருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றார். இங்குத் திருவேங்கடமுடையானை இராமனாக விளிக்கின்றார், அவனும் இவனும் ஒருவனே என்ற ஒற் றுமை நயம் தோற்றுவதற்காக, 'இராவணனால் குடி யிருப்பு:இழந்து கிடந்த தேவர்கள் யாவரும் களித்து வந்து தொழும்படியான திருவேங்கட மலையிலே எழுந்தருளி