155 வடவேங்கடமும் திருவேங்கடமும் SAASAASAASAASAASAASAASAASAAAS - யிருக்கின்ற எம்பெருமானே! இவ்விருள்தருமா ஞாலத் இன் இருப்பு பெருந்துக்கம் என்றுணர்ந்த என் இடரைப் (அகங்காரம், மயிகாரம்) போக்கியருளாய்” (1.10:1). புற் றிலே அரவங்கள் மாறாதவாறு இருப்பதுபோல, இலங்கை இராவணனுக்கு முன்பும் மாலியவான் முதலியவர்கள் குடியிருந்த இ.ம். அவர்களையும் பெரிய திருவடியின்மீது ஏறிச்சென்று ஒழித்த வரலாற்றை நினைவு கூர்கின்றார். 'ஆர்த்தர்களைக் காப்பதற்கென்றே தனிமாலை இட்டிருக் கின்ற உனக்கு என்னுடைய விரோதிகளைப் போக்குகை ஒரு பெரிய செயலன்று. அருள் செய்ய வேண்டும்' (1 18:3). 'பிறரை இரட்சிக்க நான் ஆற்றலுடையனாயினும், பாவிகளின் தலைவனான உம்மை இரட்சிப்பது எனக்கு எளிதன்று; இஃது அருமையான செயல்' என்று எம்பெரு மான் திருவுள்ளம் ஆனதாகக் கருதி, பிரளய காலத்தில் கடல் சூழ்ந்த உலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்திட்டு இளையதொரு ஆலந்தளிரின்மீது திருக்கண் வளாந்தருளின அகடிதகடநா சமர்த்தனான உனக்கு அரிதான செயலும் உண்டோ? எல்லாம் எளிதே என்று அந்த ஆற்றல் சிறப்புத் தோன்றத் திருமலை யில் சேவை சாதிக்கின்றாய். எனக்கு அருள்புரியாய்” (1. 10:3). திருமலையில் எழுந்தருளியிருக்கின்ற இருப்பில் பரத்துவம், செளலப்பியம் என்ற இரண்டு திருக்குணங் களும் விளங்குகின்றன என்ற குறிப்பை இரண்டு நிகழ்ச்சி களால் புலப்படுத்துகின்றார். திருவாய்ப்பாடியில் ஆய்ச் சியர் உறிகளின் மேலே சேமித்து வைத்த நெய் முதலிய பசு தரும் பொருள்களை அமுது செய்தருளின நிகழ்ச்சி யால் செளலப்பியம் புலப்படுகின்றது. வாமன மாணியாய் மாவலியிடத்துச் சென்று நீரேற்று நிலம் பெற்று ஈரடி யாலே உலகளந்தாய்' என்ற நிகழ்ச்சியால் பரத்துவத்தை வெளியிடுகின்றார்.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/188
தோற்றம்