பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲58 வடவேங்கடமும் திருவேங்கடமும் அருள் செய்ததையும் பேசிக்'குறிக்கோள் எனை நீயே"'ஓ டியாலும் உளன் என்று திருவுள்ளத்தில் வைத்திரு'என் கின்றார். 'திருவனந்தாழ்வானைப்போலே என்னையும் அத்தாணிச்சேவகத்திற்கு ஆளாக்கிக்கொள்வாய்' என்பது குறிப்பு (1.10:5). இந்த ஐந்து பாசுரங்களும் ‘அடியேன் இடரைக் களையாயே' ( ), 'அருளாயே (2), ‘அடியேற்கு அருளாயே (4), குறிக்கோள் எனை நீயே (5) என்று பிரார்த்தனையாகச் செல்வதைக் காண்கின்றோம். இங்ஙனம் பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கித் திரு மலையப்பன் அவன் திருவுள்ளத்தில் புகுந்தான். இதனை அறிந்த ஆழ்வார் அதனை இனிதாக அநுபவிக்கின்றார். மன்னாஇம் மனிசப் பிறவியை நீக்கித் தன்ன்ாக்கித் தன்னின் அருள்செய்யும் தலைவன் மின்னார் முகில்சேர் திருவேங் கடம்மேய என்ஆனை என் அப்பன் என்நெஞ்சில் உளானே(6) என்பது பாசுரம். எம்பெருமான் தமது நெஞ்சில் புகுந்த வாறே தாம் சம்சாரத்தில் நின்றும் விலகிவிட்டதாகவே நினைத்துப் பேசுகின்றார் ஆழ்வார். 'நிலைத்திராத இந்த மானிடப் பிறவியைப் போக்கடித்து, என்னையும் தனக்கு ஆளாக்கிக் கொண்டு எனக்கு இன்னருள் செய்யும் எம்பெருமான், மின்னலோடு கூடிய முகில்கள் சேரப் பெற்ற திருமலையில் எழுந்தருளியிருக்கின்ற என் ஆனை போன்றவன், என் நெஞ்சில் எழுந்தருளி விட்டான்' என்கின்றார். இதில் மின்னார்முகில் சேர் -பிராட்டி யும் பெருமாளும் சேர்ந்க சேர்த்தியை உவமையிட்ட அற்புத நயம் அநுபவித்து மகிழத் தக்கது (1.10:6). ‘அண்ணா ஆடியேன் இடரைக்களையாயே!” என்று முதற்பாசுரத்தில் தாம் வேண்டிக் கொண்டபடித் தம்