பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼露婷 வடவேங்கடமும் திருவேங்கடமும் வந்தாய்; என்மனம் புகுந்தாய் மன்னிநின்றாய் தந்தாத கொழுஞ்சுடரே! எங்கள் நம்பீ! சித்தா மணியே திருவேங் கடம்மேய எந்தாய்! இனி யான் உனை என்றும் விடேனே (9) என்பது பாசுரம். 'வந்து என்மனம் புகுந்து மன்னி தின் தாய்' எனறு ஒரு வாக்கியமாகவே சொல்லி விடலாம். ஆனால் ஆழ்வார் அங்ங்ணம் சொல்லவில்லை. தம்முடைய பேரானந்தம் நன்கு விளங்குமாறு வந்தாய்-என் மனம் புகுந்தாய் - மன்னி நின்றாய் என்று தனித்தனி வாக்கிய மாக நீட்டி நீட்டி உரைத்து மகிழ்கின்றார். வந்தாய் - பரமபதம், திருப்பாற் கடல் முதலான சிறந்த இடங்களை விட்டு இவ்விடம் (திருமலை) வந்தாய். என்மனம் புகுந்தாய் - வந்த இடத்திலும் அதுட்டானம் என்ற நியம நிட்டைகளில் சிறந்த யோக்கியர்களின் மனத்தைத் தேடியோடாமல் நாயினும் சுேடனான என் மனத்தைத் தேடிப் பிடித்து வந்து புகுத் தாய். மன்னி கின்றாய்- இனிய இடங்களில் நாம் சுகமாய் இருப்பதை விட்டு இவருடைய அழுக்கு நெஞ்சில் சிறைப்பட்டுக் கிடப்பானேன்? என்று வெறுத்து நெஞ்சைவிட்டு நீங்காமல் இதனைவிடச் சிறந்த இடம் வேறொன்று நமக்கு இல்லை என்று என் நெஞ்சில் நிலைத்து இருந்து விட்டாய். "அப்ராக்ருதனான நீ மிகவும் கீழான என் நெஞ்சில் வந்து புகுந்ததனால் உன்னுடைய தேசுவுக்கு எள்ளளவும் குறை இல்லை; மாறாக முன்னிலும் தேசு விஞ்சி நிற்கின்றது என்று குறிப்பிடுவதுபோல் 'நந்தாத கொழுஞ்சுடரே!” என விளிக்கின்றார். சிந்தாமணியே- காமதேனு, கற்பகத் தரு முதலானவைபோல நினைத்த மாத்திரத்தில் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியவனே! இப்படிப் பட்ட உன்னை இனி நான் ஒரு நொடிப்பொழுதும்