பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வடவேங்கடமும் திருவேங்கடமும் மண்ணோருடைய நெஞ்சு எங்ங்னம் தீய பொருள் களையே சிந்தை செய்ன்றதோ அங்ங்னமே நீ விஷயாத் தரங்களைச் சிந்தியாமல் சம்சார நாற்றமே கண்டறி யாத தித்தியசூரிகளின் நெஞ்சுபோலே மிக்க தவம் செய்த மனிதர்களான மிருகண்டு, முதலாழ்வார்கள், புகழ் மழிசை ஐயன், அருள் மாறன், சேரலர்கோன், துய்ய பட்டநாதன், தொண்டரடிப் பொடிகள், நற்பாணன் போன்றவர்களின் நெஞ்சிலும், திருமலையிலும் நித்திய வாசம் பண்ணுபவனும் வாமன மாணியாக வடிவெடுத்த வனுமான எம்பெருமான் திறத்தில் அடிமைத் தொழிலை ஏற்றுக் கொண்டது நின்னுடைய பெறுதற்கரிய பேறு அன்றோ? (2.1:1). 'திருமலையம்பனுடைய திருக்குணங் களின் தன்மையறிந்து நீ அவன் திறத்தில் அடிமை பூண்டாயே! நாம் உறவினரென்றும், பங்காளிகள் என்றும், ஆபாச பந்துக்களைக் கற்பித்துக்கொண்டு அவர்கட்கு நன்மை செய்வதும், சிலரை விரோதிகள் என்றும் கற்பித்துக்கொண்டு அவர்கட்குத் தீமை செய்வது மாக இருக்கின்றோம். எம்பெருமானே எல்லாத் திறத். திலும் வேற்றுமையின்றி அன்புடையவனாகச் சொல்லப் படுபவன். இதனைக் கண்டறிந்து அவனுக்கு அடிமை செய்கையே புருஷார்த்தம்’ என்று கொண்டாயே! (2.1:2) என்று உகக்கின்றார். "எண்டிசையுமுள்ள பூக்கொண்டு ஏத்தியுகந்து தொண்டரோங்கள் பாடியாட (திருவாய். 4.7:8) என்று தம்மாழ்வார் கூறியவாறு பல வகைப்பட்ட மலர்களைக் கையிலேந்திக் கொண்டு துதிக்க வருகின்ற தொண்டர் களையும் அவர்களோடு சம்பந்தம் பெற்ற மற்றுமுள் ளோரையும் பொருட்படுத்தி அவர்களைப் பரமபதத்தில் கொண்டு சேர்க்கின்றான் என்ற இச்சிற்ந்த குணத்தைக் கண்டு அத்திருமலையப்பனுக்குத் தொண்டு பூண்டாயே!” (2.1:3) என்று நெஞ்சத்தை உகக்கின்றார். 'எம்பெரு.