பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கை மன்னன் கருத்தில் வேங்கடம் 163 மான் இந்த மண்ணுலகத்திலே வந்து அவதரித்துப் பக்தர் களிடம் பல்வேறு பட்ட கைங்கரியங்களைக் கொண் டருளி, அந்த அளவிலும் மனநிறைவு பெறாமல், இன் னும் அவர்களிடத்தில் நித்திய கைங்கரியம் கொள்ள வேண் டும் என்று அவர்களைத் திருநாட்டிலே கொண்டு வைக்குட வனாய், கோபாலகிருஷ்ணனான திருவேங்கடமுடை யானுக்குத் தொண்டு பூண்டாயே!” (2.1:4) என்று உகக் கின்றார். 'சமணர்கள், பெளத்தர்கள் முதலிய புறமதச்சமயத் தவர் மிகுதியாக இருந்தும் அவா.கள் கூட்டத்தில் சேர்ந்து பாழ்பட்டுப் போகாமல் பூரீவைணவ சம் பிரதாயத்தில் பிறந்து எம்பெருமானுக்கு அடிமைப்பட்டு வாழப் பெற்றோமே' (2.1:5, 6, 7) என்று தம் நெஞ்சை உகக்கின்றார். 'சேயன், அணியன், சிறியன், பெரியன்" என்று பக்வத்விஷயத்தில் இழியமாட்டாத சம்சாரிகள் பக்கல் சேராமல் திடீரென்று திருமலையப்பன் திறத்தில் அடிமைத் தொழில் பூண்டு நின்றாயே! (2. 1:8). 'நெஞ்சமே, நீ நேற்றுவரையில் விஷயாந்திரங்களில் மண்டித் திரிகின்ற சம்ாாரிகளுடன் கூடியும், அவர்கள் அநுபவித்த விஷயங்களையே அநுபவித்தும், அவர்கள் பேசுகின்ற பேச்சுகளையே பேசியும் போந்தாயன்றோ? இப்படியிருந்த நீ இன்று திடீரென்று எப்படிப்பட்ட நிலைக்கு வந்து விட்டாய்! நீ பெற்ற பேற்றை நீ அறிகின்றிலை. ஆகையால் நான் எடுத்துச் சொல்லு கின்றேன்; அன்புடன் கேளாய். பக்திக்குப் போக்கு வீடாகப் பாடியும் ஆடியும் பலரும் பணிந்து ஏத்தினாலும் காணமுடியாதவனும், நான்முகன் இந்திரன் சிவன் முதலான மேலான தேவர்கள் மேவித் தொழப்பெற்றவனு மான திருவேங்கடமுடையான் திறத்தால் அடிமைத் தொழில் பூண்டாய் காண்' என்று உகக்கின்றார்.