பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. சடகோபன் சிந்தயில் திருவேங்கடம் 'நம்மாழ்வார் பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை முதலிய வற்றை நோக்கும்போது அவர் ஆழ்வார் திருநகரித் திருக் கோயிலிலுள்ள திருப்புளியாழ்வாரின் திருவடிவாரத் திலேயே தம்முடைய வாழ்க்கையைக் கழித்ததாக ஊகிக்க இடந்திருகின்றது. அவர் மங்களாசாசனம் செய்துள்ள 36 திவ்வியதேசங்கட்கும் சென்று வந்ததாகக் கருதுவதற்கு இடந்தரவில்லை. மாறாக அந்தந்த திவ்விய தேசத்து எம் பெருமான்களே நேரில் வந்து ஆழ்வாரின் மங்களாசாசனம் பெற்றார்கள் என்ற ஐதிகமும் உண்டு. இதற்குமேல் ஆய்ந்து முடிவுசெய்ய எந்தவித இலக்கியத் தடயங்களும் கிடைக்கவில்லை. இன்னொரு சம்பிரதாயமும் ஈண்டுக் கருதத் தக்கது. 'கங்குலும் பகலும் (7.2) என்ற ஒரு திருவாய்மொழி தவிரமற்று எந்த ஒரு பாசுரத்தாலும் திருவரங்க நாதனுடைய குறிப்பை அறிந்து கொள்ளவில்லை. அப்படி யிருந்த போதிலும், வான் திகழும் சோலை மதிளரங்கர் வண் புகழ்மேல் ஆன்றதமிழ் மறைகளாயிரமும்' என்ற பட்டரின் திருவாய்மொழிபற்றிய தனிய னால் திருவாய்மொழி ஆயிரமும் பெரிய பெருமாள் விஷயமாகவே அருளிச் செய்யப்பட்டது என்பது தெளி வாகும் என்பர். இக்கருத்தினை ஈட்டு ரீ-சூக்தியும்