பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் 167 'முடிச்சோதியாய் (3.1): என்பது; அழகர் திருமலையிலே அநுபவிக்க இழந்தவரிவர் என்பது அதனால் தெளிவா கின்றது; அர்ச்சாவதாரத்திலுண்டான அநுபவாபேட்சை தலைக் கட்டாமற் போகக் காரணமில்லையே; மேன் மேலும் மனோரதப்படி அ துபவிக்கலாமே இழந்து நோவு படுகைக்குக் காரணம் என்கொல்?’ என்று, இதற்கு பட்டர் அருளிச் செய்த சமாதானம்: ஆழ் வார் அநுபவிக்க ஆசைப்பட்ட இடம் பரமபதமானால் என்ன? வியூகமானால் என்ன? விபவாவதாரம் என்றால் என்ன? அதுபற்றி வாசி (வேற்றுமை) இல்லை. தர்மியின் ஐக்கியத்தாலே விஷயம் எங்கும் ஒருபடிப்படப் பூர்ண மாகவே உள்ளது. அர்ச்சாவதாரங்களை நாமெல்லாரும் அநுபவிப்பது போலன்றே ஆழ்வார் அநுபவிப்பது. அங்கும் விஷயத்தைப் பூர்ணமாக அநுபவிக்க ஆசைப் பட்டார், அஃது அசாத்திய மானமையாலே தளர்ந்தார்' -என்று.* விளக்கம்: பரத்துவம் வியூகம் விபவங்களோடு அர்ச் சாவதாரத்தோடு வேற்றுமையறத் தர்ம ஐக்கியத்தாே விஷயம் எங்கும் ஒரே தன்மையவாக இருக்கும். அது குறைந்து தோன்றினால் நினைக்கின்ற மக்களுடைய நினைவின் தோஷத்தாலே யாயிருக்கும்.கடலருகே சென்று நின்றால் தன் கண்களாலே முகக்கலாமளவே (Eye span) காணுதல் கூடும்; அப்படியே அழகருடைய அழகு முதலா னவற்றை அநுபவிக்கப் புக்கவிடத்தில் விளாக்குலை கொண்டு அநுபவிக்கக் கூடியனவாக இல்லை. பெரு விடாய்ப்பட்டவன் சேர்ந்த குளிர்ந்த தண்ணிர் அண்மை யிலிருக்க நோயினாலே வாய்மூடப் பெற்றால் அதனைக் 3. இதுவும் தெற்குத் திருமலைபற்றியது. 4. திவ்வியார்த்த தீயிகை 3.2 அவதாரிகை காண்க.