பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} வடவேங்கடமும் திருவேங்கடமும் குடிக்க முடியாது துடிக்குமாப்போன்று, விஷயமும் அண்மையிவிருந்து விடாயும் மிச்கிருக்கச் செய்தே, அளவிற்கு உட்படாத விஷயமாகையாலே பரிச்சேதித்து அதுபவிக்க வொண்னொதொழிய நோவுபடுகின்றார். ஆயின் பிரகிருதி சம்பந்தத்தை யறுத்துத் தந்தருள வேணும் என்று வேண்டுவதற்குக் காரணம் என்ன என் றால், 'இவ்வாறு அநுபவிக்கவொண்ணா தொழிந்தது. இறைவனுடைய வைலட்சண்யத்தாலே வந்தது என்று அறிய மாட்டாது, தம்முடைய கரணங்களின் குறைவு காரணமாக வந்தது என்று கருதி ‘இறைவன் தான் முதலிலே இத்தைக் கழித்துத் தன்னை அநுபவிக்கைக்கு உறுப்பாக உலகத்தைப் படைத்தான்; படைக்கப்பட்ட உலகத்திலே தான் வந்து அவதரித்தான்; அதற்குமேல. அந்தர்யாமி உருவமாக நின்று சத்து ஆதிகளை நிர்வகித் தான்; அவன் இப்படி உபகாரங்களைத் தொடர்ந்து செய்து கொண்டுவர, நான் அவற்றையெல்லாம் அசத் துக்குச் சமமாக்கிக் கொண்டேன்; இனி நான் அவனைக் கிட்டுதல் என்று ஒன்று உண்டோ?” என்று எல்லையற்ற துக்கக் கடலில் மூழ்கினவராய் முடிந்தேனேயன்றோ?” என்று ஆழ்வார் சோகிக்க, இறைவன், நீர்கரணங்களின் குறைவு காரணமாக வந்தது என்று சோகிக்க வேண்டா; கரணசங்கோசமில்லாதாரும் நம்மை அநுபவிக்குமிடத் தில் இப்படியன்றோ படுவது? என்று இவர் இழவினை வினை நினைத்து'நீர் நினைத்த வகைகளெல்லாம் பரிமாறு: கைக்கு ஈடாக வடக்குத் திருமலையில் நின்றோம்; அங்கே கிட்டி அநுபவித்து மகிழ்வீர்” என்று தான் அங்கு நிற்கின்ற நிலையைக் காட்டிச் சமாதானம் பண்ண, ஆழ்வாரும் ஒருவாறு சமாதானமடைந்தவராய் இனிமையோடே தலைக்கட்டுகின்றார்." 5. ஈட்டின் தமிழாக்கம்-3, 2 முன்னுரை காண்க.