பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟*登 வடவேங்கடமும் திருவேங்கடமும் செய்கைக்குப் பாங்காக இருந்ததேயாகில், இனித் தான் அங்குச் சென்றாலும் குணாதுபமவன்றோ பண்ணுகிறது: அத்திச் செளலப்பிய முதலிய நற்குணங்கள்தாம் விளங்கிக் காணப்படுவதும் இங்கேயாகில், இனி அங்குள்ளாரும் (வானவர் முதலானோர்) வந்து அடிமை செய்வதும் இங் கேயாகில், நாமும் அங்கே (திருமலைக்குச் சென்று புக்கு அடிமை செய்வோம்’ என்று முடிவு செய்கின்றார். பசியும் இருந்து கையிலே சோறும் கொண்டிருப்பவன் நீரும் நிழ அம் கண்டால் உண்ணப் பாரிக்குமாறு போன்று ஆழ்வா மும் அடிமை செய்யப் பாரிக்கின்றார்-எல்லாக் காலத்தி லும் எல்லா அடிமைகளும் செய்த இளைய பெருமாளைப் போல. உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன் ஊண் அத்தியாயம் (Dietics) படிக்குமாறு போன்று இருப் பது ஒன்றாயிற்று இவரது கைங்கரிய மனோரதம்." நம்மாழ்வாரின் அருளிச் செயல்களில் காணப்பெறும் திருவேங்கடத்தைப் பற் றிய பாசுரங்கள் : திருவிருத்தம் 7 பெரியதிருவந்தாதி 1 திருவாய்மொழி 35 பாசுரங்கள் 43 இவற்றுள் 3.3 திருவாய்மொழியும் 6.10 திருவாய்மொழி யும் பதிகங்கள். இவற்றுள் முன்னது வைண வதத்துவத் தின் முடிந்த முடிவாக இறைவனுக்குச் செய்ய வேண்டிய கைங்கரியத்தையும். பின்னது அவனை எல்லோரும் ஒக்க அடையக் கூடிய சரணாகதியையும் குறிப்பிடுகின்றன. இவற்றை விரிவாகக் காண்போம். 8. ஈட்டின் தமிழாக்கம். 3.3 முன்னுரை காண்க.