பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 வடேவங்கடமும் திருவேங்கடமும் அந்தந்த இடங்கட்குத் தக்கவாறு நின்று அந்தரங்கமான அடிமைகளைச் செய்யவேண்டும் என்ற விருப்பம் தெளி வாகும். ஆக ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி' என்று எல்லாக் காலத்தையும் எல்லாத் தேசத்தையும் எல்லா நிலைகளையும் நினைக்கச் செய்கிறது. ஒழிவில் காலமெல்லாம் என்பதற்கு ஈட்டாசிரியர் ஒர் ஐதிகம் குறிப்பிடுகின்றார்: "ஆழ்வார் திருவரங்கப் பெருமாள ரையர் இத்திருவாய்மொழி பாடப்புக்கால் ஒழிவில் கால மெல்லாம்; காலமெல்லாம், காலமெல்லாம்"...என்று இங் கனே நெடும் போதெல்லாம் பாடி, மேலே போக மாட் டாதே அவ்வளவிலே தலைக் கட்டிப் போவராம்” என்று. இதனால் அரையர் ஆழ்வாருடைய நிலைமையை அப் படியே அடைந்து கைங்கரியத்தில் தமக்குள்ள ஈடுபாட்டி னைக் காட்டினர் என்பது பெறப்படும். வழுவிலா அடிமை: குற்றமற்ற அடிமை. குற்றமா வது குறைவு. எம்பெருமான் திறத்தில் ஈடுபட் ட வர் க ள் எ த் த ைனப் பேருண்டோ அ த் த னை ப். பே ரு ம் தனித்தனியே .ெ ச ய் கி ற கைங்கரியங்களை யெல்லாம் தாம் ஒருவரே செய்யக் கருதுகிறபடி. இளைய பெருமாள் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேண்டும்; பரதாழ்வான் பாடி வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியா மலிருந்து செய்யவேண்டும் என்றபடி. ஒரடிமை குறையி லும் இவர்க்கு உண்டது. உருக்காட்டாது (உணவின் நலன் உடலில் தெரியாதிருத்தல்). பூர்வசன பூஷணத்தில் அருளிச் செய்யப் பெற்ற இளைய பெருமாளின் கைங்கரிய சாம்ராஜ்யம் ஈண்டு நினைக்கத் தக்கது (மு.முட்சு 105, 108), 'வழுவிலா தடினம்’ என்பதற்கு இன்னொரு வித மாகவும் பொருள் கூறலாம்; தான் கைங்கரியம் செய்வ. தாக அநுபவ மகிழ்ச்சி கைங்கரியத்திற்கு வழு: அஃதில் லாமை சொன்ன படியாம். கைங்கரியத்தில் களையறுக்