பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் i. 7 வமே ஆத்மாவுக்குச் சொரூபம்', 'பிரணவத்தால், கண்ண புரம் ஒன்றுடையானுக்கு அடியேன், ஒருவர்க்குரியனோ? (பெரி. திரு. 8.9:3) என்கின்றபடி வே-பர சம்பத்தும் சொல்லிற்று' (முமுட்சு. 55, 72) என்பனவற்றால் அறிய லாம், இது என்றது 'பிரணவத்தால் ஆன்மாவின் சொரூபத்தைச் சொல்லுகிறது என்று மேலே கூறியத னைச் சுட்டுகிறது. சொல்லின் சுபாவத்தைக் கொண்டு சொன்னோம்' என்றது 'மகாரத்தின் பொருளான கான் அகாரத்திற்குப் பொருளாயுள்ள எம்பெருமானுக்கே உரியவன்' என்னும்போது நான் உரியவன்' என்ற கர்த்தாவிலே நோக்காயிருத்தலைத் திருவுள்ளம்பற்றி. பொருளின் முக்கியத்துவத்தை நோக்கும்போது அகாரத் தின் பொருளான எம்பெருமானுக்கே மகாரத்தின் பொருளான ஆன்மா உரியது'என்ற பொருளே போதரும். அருளிச் செய்தருளின் வார்த்தை' என்றது நம்பிள்ளை இங்ஙனம் அருளிச் செய்தார் என்பதைக் குறித்தது. தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து எழில்கொள் சோதி எந்தை தந்தைக்கு' என்பதனால் நாராயண பதத்தின் பொருள் சொல்லப்பெறுகின்றது. செளலப்பியமும், வடிவழகும், சுவாமித்துவமும் நாராயண பதத்தின் பொருள். திருவேங்கடத்து என்றதனால் செளலப் பியமும், எழில் கொள்சோதி என்பதனால் வடிவழகும், “எந்தை' என்பதனால் சுவாமித்துவமும் போதருகின்றன என்பது அறியப்படும். பிராப்த விஷயத்தில் (வகுத்த விஷயத்தில்) செய்யும் கைங்கரியமே பிராப்பியம் (பலம்). எம் பெருமானார் இத்திருவாய் மொழியை அருளிச் செய்யும்போது அந்தக் காலட்சேபக் குழுவில் நூற்றுக் கணக்காக எழுந்தருளியிருந்த சீடர்களை நோக்கி "ஆழ்வார் பாரித்த குறை தீரத் திருவேங்கடமுடையான் பரிசரத்திலிருந்து நித்திய கைங்கரியம் செய்ய விருப்ப முடையார் யாரேனும் உளரோ?' என்று வினவியருள,