பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடவேங்கடமும் திருவேங்கடமும் i o 'é; குளிரருவி வேங்கடமாகையாலே எல்லாரும் குளிருக்கு அஞ்சி விடை கூறாதிருக்க, அனந்தாழ்வான் எழுந்து ‘அடியேனுக்கு நியமித்தருள வேணும்' என்றார்; அது கேட்டு உகந்த எம்பெருமானார் நீர் ஒருவரே ஆண் பிள்ளை' என்று போரப் பொலியக் கொண்டாடித் தழுவி யருளி விடை கொடுத்தருளினார். அது முதலாக அனந்தாண் பிள்ளை என்று அவருக்குச் சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று என்பது இதிகாசம். இளமாறுசருடைய மாணாக்கராகிய இவர் 74 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். இவர் திருமலைக்குச் சென்று அங்கு ஓர் ஏரியை வெட்டி அதற்கு இராமநுசன் புத்தேணி என்ற பெயரை அமைத்தவர். ஒரு நந்த வனத்தை உண்டாக்கி அதிலிருந்து மலர்களைப் பறித்துத் திருவேங்கடமுடையானுக்கு நாடோறும் மலர்க்கைங் கரியம் செய்து கொண்டு வந்தவர். ஒருநாள் மலர் கொய்கையில் நல்ல பாம்பு ஒன்று இவர் கையிலே தீண்ட, அதற்குப் பரிகாரம் ஒன்றும் செய்யாது மீண்டு, நீராடி, பின்னரும் சென்று மலர்களைக் கொய்து மாலை இதாடுத்துத் திருவேங்கடமுடையனைச் சேவிக்கச் சென் றார். அப்போது இறைவன் அர்ச்சகர் மீது ஆவேசித்து, நஞ்சு தீர்க்க உண்டாதிருந்தென்ன என்று கேட்டருள், இவரும்? கடியுண்ட பாம்பு வலிதாகில் திருக்கோனேரியில் துர்த்தமாடித் திருவேங்கடமுடையானைச் சேவிக்கின் றேன். கடித்த பாம்பு வலிதாகில் விரஜையிலே தீர்த்தமாடி வைகுண்டநாதனைச் சேவிக்கின்றேன்' என்று பதிலிறுத்த பரமயோகி’. இவர் நினைவாக இன்று திருமலையில் இராமதுசபுத்தேரிக்கு அருகில் நவீன வசதிகளுடன் பல gig-gog sir stil- du i pi Amanthalvan Tank Cottages (A T C.) என்ற பெயரி ல் வழங்கி வருகின்றன. مبتییجی ہممجمسہ...بر 16. வைணவ உரைவளம்-பக். 296.