பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvji புராணகாரர்கள் கூறியபடியே 'அழியாத செல்வத்தை அளிக்கவல்லது என்று பொருள் படுகின்ற வேங்கடம்" என்று பெயர் பெற்ற இத்திருவாளரின் திருமாளிகை இவர் வாயிலாக இன்னும் பல நூல்களாகிய அழியாத செல்வங்களை இவ்வுலகிற்கு அளித்தருள வேணுமென்றும் *சடகோபன் பொன்னடி யான இப்பெரியவர் இங்ங்ணமே தொண்டு புரிந்து கொண்டு பல்லாண்டு இனிதேகொண்ட பெண்டிர் மக்களோடு நல்ல பதத்தால் மனை வாழ்வு வாழவேண்டு மென்றும், திருவேங்கடத்தானே குலதொல்லடியேன்” (திருவாய் 8-10-1) 'எந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை- திருவேங்கடத்து...... அண்ணல், (திருவாய் 8-3-2) என்றருளிய நம்மாழ் வார்க்கும், சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் எம்மனா என்குலதெய்வமே (பெரியாழ் 5-4-1, 3) என்று பணித்த பெரியாழ்வார்க்கும் போன்று திருமலையனந் தாழ்வான் குலத்தில் தோன்றிய அடியேனுக்கும் குல தெய்வமாகிய குளிரருவிவேங்கடத்தென் கோவிந்த னுடைய பூவார்கழல்களில் மனமார மகிழ்ந்து வேண்டிக் கொள்கிறேன். சாதாரண மனிதனாகிய அடியேனை பெரும் புலவராகிய தாம் எழுதிய நூலுக்கு அணிந்துரை யெழுதும் பெரும்பனியில் இழியச் செய்த-கள்ளங் கபடமற்ற உள்ளங்கொண்ட திருவாளர் ந. சுப்புசெட்டி யாரவர்கள் திறத்தில் பணிவுடன் நன்றியைத் தெரி வித்துக் கொள்ளுகிறேன். 76, சத்திதி தெரு, ፉኡ 鷺 “) தி. அ. கிருஷ்ணமாசாரியன் 21-94-92 ịi