பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷常盘 வடவேங்கடமும் திருவேங்கடமும் கண்ணழகு உடையானுக்கு வேறோர் ஒப்பனை வேண்டா என்னும்படி இருப்பதாய், தனக்குத் தானே ஆபரணமாய், மலர்ச்சி செல்வி குளிர்ச்சி நாற்றங்க எால்ே தாமரையை ஒருவகைக்கு ஒப்பாம்படி சொல்ல லாம் படியான கண்ணழகுடையவன். இது, முந்துறவு செய்யும் கண்களைச் சோல்லுகின்றது. அடியார்களை முந்துற முன்னம் கடாட்சித்து, பிறகு சோதி வாய் திறந்து வார்த்தை சொல்லுவானாதலால், திருக்கண்ணுக்கு அடுத்தபடியாக செங்கனிவாய்' என்று சொல்லி அதனை அதுபவிக்கின்றார். நோக்குக்குத் தப்பினார்க்கும் தப்ப ஒண்ணாத புன்முறுவல் முறுவலாலேயாயிற்று இவரை எழுதிக்கொண்டது. அந்த முறுவலிலே அகப்பட்டாரை மீளாதபடி ஆழங்காற்படுத்தும் வடிவழகைச் சொல்லு கின்றது - கருமானிக்கம் என்று. இறைவன் வடிவழகான திருமேனியன்றித் திருமலையும் சிரமத்தைப் போக்கக் கூடியதாக இருக்கும்படியைத் தெரிவிக்கும் பாங்கில், 'தெள் நிறை சுனைநீர்த் திருவேங்கடத்து' என்கின்றார். 'அணிகொள் செந்தாமரைக் கண்னன்’ என்ற தோடு, செங்கனிவாய்' என்றதனோடு, கருமாணிக் கம்' என்றதனோடு தெள் நிறை நீர் சுனை என்ற தனோடு வேற்றுமையற்று இருப்பதால் விக்கிரக அநுப வத்தை விட்டுச் சுனையை அநுபவித்ததற்குக் காரணம் ஆயிற்று; அதுவும் (கனை) அந்நிலத்தில் உள்ளதென் றாகையாலே. எம்பெருமான் சுவாநுபவத்தை நமக்குத் தந்தருள்வான் என்பது பாசுரத்தில் இல்லையே என்று ஐயுற வேண்டா: எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன்' என்ற ஈற்றடியில் இக்கருத்து உறைந்து நிற்கும். அவன் நமக்குத் தந்தருளாதொழிந்தானாகில் அவனுக்குத் 'தொல்புகழுடைமை எங்ங்னம் தேறும்? (3). வானவர்க்கு ஈசன் என்று சொல்லுவது திருவேங் கடத்தானுக்கு ஏற்றமாகாது. "கானமும் வானரமும்