பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 வடவேங்கடமும் திருவேங்கடமும் அலகும் தொழுதுமை சொன்னபடி ஆகும்' என்று விளக்குவார். இப்போது இப்பாசுரத்தில் (5) தீதில் சீர்த் திருவேங்கடத்தான் என்ற தொடரின் பொருள் காண வேண்டும். நீசனேன் நிறைவொன்று மிலேன்' என்ற இவருடைய குற்றத்தைக் குணமாகக் கொண்டு அங்கீ கரித்து, இவருக்கு அவ்வருகு குற்றமுடையாரைத் தேடிக் கிடையாமையாலே நிற்கின்றான் என்பது பொருள். இவ்விடத்தில் தீதில் சீர் என்பதன் கிறப்பான சுவாரசி யத்தை ஆழ்ந்து சிந்தித்து அறிந்து நம்பிள்ள அருளிச் செய்துள்ள பொருள் சிறப்பு மிகவும் சுவைக்கத் தக்கது. "சீர்க்குத் தீதில்லாமை எப்போது தேறுமென்னில்: 'நீசனேன் நிறையொன்றுமிலேன்' என்று சொல்லுகின்ற இவரைக் காட்டிலும் மிகவும் நீசனான ஒருவரைத் தேடிப் பிடித்தால்தான் தேறும்; உண்மையில் அப்படிப்பட்ட ஒருவர் உலகத்தில் இல்லாமையாலே எம்பெருமானுக்குக் கிடைத்திலர். கிடைக்காவிடினும் என்றைக்காவது அப்படிப்பட்ட ஒருவர் கிடைக்காமல் போவாரா? என்ற திசையினால் திருமலையில் வீற்றிருத்தல், சயனித்திருத்தல் இவற்றைச் செய்யாமல் நின்று கொண்டே தேடுகிற படியைக் காட்டுகின்றானாம் திருவேங்கடமுடையான். அதனை ஆழ்வார் அதுசத்தித்த பாசுரம் இது (5). திருமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு வணக்கம்’ என்று சொல்லுதல் செய்யக் கூடிய காரியம். அதனைச் செய்கின்றவர்கட்கு அநுபவித்தே தீரக்கூடிய கடன்களும் உடல் சம்பந்தமாக வருகின்ற நல்வினை தீவினைகளும் வெந்து அழிந்து விடும்; அடியார்களாகிய தாங்கள் தங்கட்குத் தக்கதான கைங்கரியத்தையே செய்வார்கள் (6). முதல் பாசுரத்தில் திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்தார்; அங்கு அருளிச் செய்யாத தான நம என்பதத்தின் பொருளை ஈண்டு (பாசுரம்-6). அருளிச் செய்கின்றார்.