பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் 1 & # வோம் கடங்கள் மெய்ம்மேல் வினை முற்றவும் தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார் வேங்க டத்துறை வார்க்கு நமஎன்னல் ஆஅங் கடமை அதுசுமந் தார்கட்கே (6) (கடன்கள் அநுபவித்தே தீரவேண்டியவை: மெய்-உடல், ல்ே வின்ை - நல்வினை தீவினை கள்; வேம்-வெந்தொழியும்; நல்லன கைங்கரியங் கள்; நம-வணக்கம்} என்பது பாசுரம். நம: என்பது நெஞ்சில் உண்டாக வேண்டா; சொல்லளவே அமையும். என்னலாம் கடமை யது: எளிதான உபாயத்தை என்றபடி. அதுசுமக்தார்கட்கு: பெறுகின்ற பேற்றின் கனத்தையும் இவனுடைய முயற்சி யின் சிறுமையையும் பார்த்து இப்பேற்றுக்கு இவன் இம் மலையைச் சும வானோ? என்பாரைப் போன்று அது சுமந்தார்க்கு என்கின்றார். பக்தர்களின் கருத்தில் நம: என்ற ஒரு சிறிய சொல் வந்தாலும் அதனை ஒரு மலை யாகவே கனக்க நினைப்பானாம் எம்பெருமான்.இதனால் எத்தனையோ பிறப்புகளில் சஞ்சிதங்களாய் மலை மலை யாகக் குவிந்து கிடக்கும் வினைகள் எல்லாம் தன்னடைவே விலகிப்போம். ஆனதால் வேம்கடங்கள் மேல் வினை முற்றவும் வேம்; (இது) மெய்' என்றருளி யிருப்பது மிகப் பொருந்தும் என்பதை அறிகின்றோம். இவ்விடத்தில், போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் துரசாகும் செப்பேலோ ரெம்பாவாய் -திரு ப 5 என்ற ஆண்டாள் வாக்கு நினைக்கத் தகும். நாம் விரும்பும் அடிமைகளை எல்லாம் செய்வதற்குத் திருவேங்கடமுடையாணை ஆச்ரயிக்க வேண்டுவதில்லை. அவற்றையெல்லாம் திருமலையே தரும்.