பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் 183 "குன்றம் ஏந்தி குளிர்நிலை கனத்தவன்” என்ற முதலடி ஒர் ஊருக்கு உதவினமை சொல்லுகின்றது. அன்று ஞாலம் அளந்த பிரான்’ என்ற இரண்டாம் அடி உலகுக்கு எல்லாம் உதவினமை சொல்லுகின்றது.தாவியன்று உலகமெல்லாம் தலைவிளாக்கொண்ட திரிவிக்கிராமாவதார வரலாறு மிகு புகழ்வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். இப்படிப் பட்ட பரன் (எம்பெருமான்) சென்று திருவேங்கடமா மலை ஒன்றுமே தொழ நாம் வினைகள் யாவும் தம்மடைவே நசித்தொழியும். ஆகவே, 'உள்ளே எழுந்தரு ளியிருக்கின்ற திருமலையப்பன் வேண்டா; திருமலையாழ் வாரே போதும்' என்கின்றார். எம்பெருமான் படைப்பி லுள்ள அசித்தும் வனங்குதற்குரியது; தொழுவதற்கு உரியது என்பது பெறப்படும். திருமாலிருஞ்சோலை மலை என்றேன்; என்ன, திருமால் வந்து என்நெஞ்சு நிறையப் புகுந்தான்' (திருவாய். 10.8:1 என்ற ஆழ்வா ரின் வாக்கே இக்கருத்தினை அரண் செய்யும், (8). வீடுபேற்றினைத் தருவதற்குத் திருமலையாழ்வார் பூர்த்தியாக வேண்டும் என்பதில்லை. அதில் ஏகதேசம்’ அமையாதோ? என்கின்றார். ஏகதேசம்’ என்ற சொல் லால் நினைப்பது திருமலையப்பனை. திருமங்கை மன்ன னும் வடமாமலை உச்சியை' (பெரி. திரு. 7.10:3) என்று ஏகதேசமாகவே சீநிவாசனைக் குறிப்பிட்டதைக் காணலாம். பிணி வீயுமாறு செய்யும் திருவேங்கடத்து ஆயனின் நாண் மலராம் அடித்தாமரையை நெஞ்சினால் நினைத்து வாயினால் துதிப்பவர்கட்கு மூப்பு பிறப்பு இறப்பு ஒய்ந்து ஒழியும் (9). இப்பாசுரத்தின் ஆறாயிர படி: திருவேங்கடமுடையானன்றோ பிராப்பியம், திரு மலையே பிராப்பியம் என்று சொல்லுவது என் என்னில், திருவேங்கடமுடையானுடைய பிராப்பியத்துவமும் திருமலையோடுள்ள சம்பந்தத்தால் வந்ததாதலால் திருமலையே பிராப்பியம் என்கின்றார்” என்பது.