பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贾器叠 வடவேங்கடமும் திருவேங்கடமும் சிரியர்கள் பாசுரங்களில் மிகவும் ஆழ்ந்து திறமையை சொற்களால் வரையறுத்துக் தர்கட்கு பொறிபுலன்களை கின்றான். இவை எதற்காக என் தன்கி ஆயுளையும் அரு. தனில்: நமலை முதலான திருப்பதிகளிலே சென்று வழி செய்வதற்காகவே. ஆயினும், உலகோர் ੋਂ வலிவுள்ள காலங்களில் விஷய போகங்களில் மண்டிக் கிடந்து திவ்விய தேச வழிபாடுகளைப்போகப் போகப் பார்த்துக்கொள்ளலாம் என்று பதற்றமற்று ஆறியிருந்து விடுகின்றனர். இந்நிலையிலேயே பல வகை களிலும் தளர்ச்சி வந்து விடுகின்றது; திவ்வியதேச வழி பாட்டை நெஞ்சாலும் நினைக்க முடிவதில்லை. இங்ங்ணம் ஆகாமல் திருமலையைப் பணிமின் என்கின்றார் (10). சரணாகதி கீழ்த்திருவாய்மொழியில் (6.9:10) ஆழ்வார், கூராழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால் வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே (1) என்று அளவுக்கு மீறிய ஆர்த்தியுடன் பரமபதத்தளவும் கேட்கும்படிக் கூப்பிட்டார். எம்பெருமான் வந்து முகக் காட்டாமையால் மி க வு ம் தளர்வெய்துகின்றார். அவன் வைகுந்தத்திலிருந்து நிலவுலகம் வந்து இராம. கிருஷ்ணாதியவதாரங்கள் எடுத்து அக்காலத்தில் இல்லா தார்க்கும் உதவும்படித் திருவேங்கடமலையில் நித்திய சூரிகள், நித்திய சம்சாரிகள், விலங்குகள், பறவைகள் முத லான எல்லோருடனும் வேற்றுமையின்றி ஒருமிடறாக வணங்குவதற்கேற்ப நித்திய சந்நிதி பண்ணியிருக்கிற படியை அதுசந்தித்து அத்திருமலையப்பன் திருவடி களிலே பெரியபிராட்டியார் முன்னிலையாகத் தம்