பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் 霊感5

  • ...*

முடைய வேறு கதி இல்லாமையை (அநந்யகதித்து வத்தை) விண்ணப்பம் செய்து சரணம் புகுகின்றார் இத் திருவாய்மொழியில் (6.10). தேச நியமம், கால நியமம், அதிகார நியமம் முதலி யவை ஒன்றும் இல்லாமல் விஷய நியமம் மட்டிலும் உள்ள சரணகதியை (பிரபத்தியை)க் கையாள நினைக்கின்றார். பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்தனுள்ளும் செளலப்பியம், செளசில்யம் முத லான குணங்கள் பூர்ணமாக இருக்கப்பெற்ற இடமே அர்ச்சை. எம்பெருமானே சொல்லப் புகுந்தாலும் சொல் லித் தலைக் கட்டமுடியாதபடிக் குணங்கள் நிறைந்திருப் பது இங்குத்தான். ஆகவே, ஆழ்வார் அர்ச்சாவதாரத்தில் தலையான திருமலையிலே சரணாகதியைச் செய்தருளு கின்றார். இந்தத் திருவாய் மொழியில் ஒன்பது பாசுரங் களாலும் சரணியனின் படிகளை கூறிப் பத்தாம் பாசுரத் தில் சரணம் புகுகின்றார். இதனைச் சற்று விரிவாகக் காண்போம். உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே! நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயீரே! திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே! குலதொல் அடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே (!). (உலப்பு-முடிவு: கீர்த்தி-புகழ், திலதம்-பொட்டு: குலதொல்-பரம்பரையாக) என்ற முதற்பாசுரம் சரண்யனின் முதற்படியைக் கூறுகின் றது. "உன்னையொழிய வேறு கதி இன்றி இருக்கின்ற