பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் துன்பமும் இன்பமு மாகிய செய்வினை யாய்உலகங்களுமாய் இன்பமில் வெந்நர காகி இனியநல் வான்சுவர்க் கங்களுமாய் மன்டல் உயிர்களு மாகிப் பலபல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்றேதும்அல் லல்இலனே2 -நம்மாழ்வார் 1978 சனவரி 14ல் சென்னையில் குடியேறிய பின்னர், வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது: என்று பக்திசாரர் கூறியாங்கு என் காலம் கழிகின்றது. இந்தக் காலத்தில் என் சிந்தை - சிந்தனை - திருவேங்கடம் பாலும் திருவேங்கடவன்மீதும் சுழன்று சுழன்று வட்ட மிட்டு வருகின்றன. இக்காலத்தில் என் சிந்தையில் முகிழ்த்த கருத்துகளைக் கட்டுரைகளாக வடித்து 'சப்தகிரியில் அவ்வப்போது வெளியிட்டு வந்தேன்; சில வெளியிடாமலும் இருந்தன. அவை தொகுக்கப் பெற்று "வடவேங்கடமும் திருவேங்கடமும் என்ற தலைப்பில் நூல் வடிவமாக இப்போது வெளிவருகின்றன. திருவாய். 3.10:7 நான். திருவந். 63 திருமலை - திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வரும் திங்கள் இதழ்.