பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் I&# இவ்விடத்தில் வைணவப் பெரியோர்கள் திருவேங்கட முடையானின் திருவடியைப் பூலாங் கழல்கள்’ என்றும், திருவரங்கம் அழகிய மணவாளனின் திருவடியைத் திருப் பொலிந்த சேவடி என்றும், கச்சிநகர்த் தேவப் பெருமாள் திருவடியைத் துயரறு சுடரடி' என்றும் சம்பிர தாயத் திருநாமங்களாக வழங்குவர் என்பது அறியத் தக்கது. (4) ஜந்தாம் படி "ஆழ்வீர்! நீர் இங்ங்னே, கிடந்து துடிப்பதேன்? எப்படியும் உம்முடைய விருப்பம் நிறை வேறச் செய்வதாகவே நினைத்திருக்கின்றோம் என்று திருமலையப்பன் திருவுள்ளமாக, அஃதை என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளம்? ஒரு நாளைக் குறிப்பிட்டுச் சொல்லலாகாதோ?’ என்று வினவுகின்றார் ஆழ்வார். திணரார் மேகம் எனக்களிறு சேரும் திருவேங் கடத்தாளே! திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நானே? (5) !தினரார்-திண்மை பொருந்திய; சாரங்கம்-திரு மாவின் வில்லின் பெயர்}. என்பது பாசுரம். யானை போன்ற மேகங்களும் மேகம் போன்ற யானைகளும் திருமலையில் இருப்பது இயல்பு. ஆகவே இரண்டுவிதமாகவும் சொல்லலாம். 'மதயானை போலெழுந்த மாமுகில்காள்! வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் (நாச், திரு. 8:9) என்ற ஆண்டாள் திருவாக்கையும்,