பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置瓣籍 வடவேங்கடமும் திருவேங்கடமும் ஆனாய்! வ:- ஆனாய்! குடபால் ஆனாய்! துன்பால மதயானாய் (திருநெடுந் 10) என்தும், "சோலை மழ களிறே” (பெரி. திரு. 4. 9:2) என்றும் கூ தி: திருமங்கையாழ்வாரின் திருவாக்குகளையும் நினைவு கூரலாம் (5). ஆறாம் படி 'உனபாதம் சேர்வதடியேன் எந் நாளோ என்றதற்கு உன் திருவடிகளை நான் சேரப் பெறும் நாள் கூட ஒன்று உண்டா? அஃது எது?’ என்று ஐயுற்றுச் சொல்வதாகவும் பொருளாகக் கூடுமே; எம் பெருமான் ஆழ்வீர் எந்நாளே என்று நீர் ஐயுறுவது ஏன்? அஃது ஒரு தேச விசேடத்திலேயே உள்ளது ஒன்று அன்றோ? என்றருளிச் செய்ய, 'அங்குள்ளாரும் இங்கே வந்தன்றோ உன்னைப் பெற்று அநுபவிக்கின்றது; அப்படி யிருக்க, எனக்கு மரத்திரம் தேச விசேட மா?' என் கின்றார். மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே! மெய்ந்தான் எய்தி எந்நாள உன் அடிகள் அடியேன் மேவுவதே? (6) என்பது பாசுரம். மெய்நா மனத்தால் வழிபாடு: மெய்யினால் செய்யும் வழிபாடு-திருச்சுற்றில் வலம் வருதல், நெடுஞ் சாணாக நிலத்தில் வீழ்ந்து வணங்குதல்; நாவினால் செய்யும் வழிபாடு தோத்திரம். மனத்தால் செய்யும் வழிபாடு சிந்தித்தல். மேய் என்பதை நாவிலும் மனத்தி லும் கூட்டலாம்; மெய்யான நா மெய்யான மனம் என்றவாறு. இங்கு மெய்ம்மை, பயனை விரும்பாமை,