உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் 19.1 சரணாகதியில் உலகளந்த திருவடிக்கு ஒரு சிறப்பு உண்டு. இதனை ஆழ்வார் பாசுரங்களில் பல இடங்களில் காண லாம். இக் காரணங்களால் நம்மாழ்வாரின் சரணாகதிக்கு இலக்கான திருவேங்கடமுடையாளின் திருவடிகள் உலக மளந்த திருவடிகளே என்பதை இப்பாசுரத்தின் 'மண்ண ளந்த இணைத் தாமரைகள்' என்ற தொடர் குறிப்பிடு கின்றது. ஏழாம் படி ஆழ்வீர்! மெய்த்தான் எய்தி என்ற இந்த ஞான இலாபம் உமக்கு உண்டாயிற்து, அது பலத்தோடு கூடியல்வது நில்லாது. இவ்வளவும் ஆனபின்பு நீர் பொறுத்திருக்கலாகாதோ?’ எ ன் று எம்பெருமான் சொல்ல, 'திருவேங்கடமுடையானாய் இருந்தும் நீ ஆதி யிருந்தாய்: உன்னுடைய இனிமை முதலியவற்றைப் பொறுத்துக் கொண்டு என்னால் தரித்திருக்க முடியாது” என்று தம் பதற்றத்தை அருளிச் செய்கின்றார் ஆழ்வார். அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே! கொடியார் அடுபுள் உடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே! செடியார் வினைகள் தீர் மருந்தே! திருவேங் கடத்தெம் பெருமானே! நொடியார் பொழுதும் உனபாதம காண நோலா தாற்றேனே (7) (மேவீ-கிட்டி; ஆடுபுள்-பகைவரைப் பொசுக்க வல்ல கருடன்; செடி-பாவம்; நொடி-சிறிய கால அளவு; நோலாது-அதுட்டிக்க முடியாமல்; என்பது பாசுரம். அடியேன் மேவி அமர்கின்ற அழுதே இஃது எம்பெருமானுக்கு இவர் சாத்தும் ஒரு திருநாமம் போலே