பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் 薰碧荔 o: செந்தாமரைக் கண் செங்கணிவாய் நால்தோன் அமுதே கண்டாருடைய தாபங்களெல்லாம் ஆறும்படி குளிர்ந்த திருக்கண்களையுடையாய், சிவந்த கனிந்திருந்து இருக்கும் திருப்பவளமுடையாய், கற்பகத் தரு பனைத் தாற்போலே இருக்கின்ற நான்கு தோள்களையுடையாய்! எனக்குப் பரம போக்கியனாக இருப்பவனே! இங்கணம் வடிவழகின் மிகுதியைப் பேசியவுடன் எனதுயிரே!” என் றது இந்தவடிவழகை நான் அநுபவிக்கும்படிச் செய்து, பிரிந்த நிலையில் நான் உளன்' ஆகாதபடி செய்தவனே! என்றவாறு , சிந்தாமணியே திருவேங்கடத்தான்ே: நெஞ்சால் நினைத்தவுடனே எதையும் அளிக்கவல்லதற்குச் சிந்தா மணி' என்று பெயர். அது போன்ற சிறந்த இரத்தினங் களை இங்குச் சிந்தா மணிகள்’ என்று சொல்லுகின்றது. திருமலையிலுள்ள இரத்தினங்களைச் சொன்னதாகவும்: திருவேங்கடமுடையானுடைய திருமேனியில் அணிந் துள்ள இரத்தினங்களைச் சொன்னதாகவுமாம். அவற் றினுடைய ஒளி அல்லைப் பகல் செய்ததாயிறறு. எப் போதும் பகலாகவே காண்பதாயிற்று. இவ்விடத்தில், படியிடை மாடத்து அடியிடைத் துணில் பதித்தபல் மணிகளின் ஒளியால் விடிபகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளி யங்குடி அதுவே (4.10:8) என்ற திருவெள்ளியங்குடிபற்றிய திருமங்கையாழ்வா ரின் அருளிச் செயல் நினைவுகூரத் தக்கது. 'பரமபதம் போல் எப்போதும் பகலேயாயிருக்கின்ற திருமலையிலே எழுந்தருளியிருப்பவனே! என்று சொன்ன வுடனே 'அக்தோ!" என்றதன் கருத்தை நம்பிள்ளை எடுத்து காட்டுவது அற்புதம் 'போக்கியமும் குறை