பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t}{} வடவேங்கடமும் திருவேங்கடமும் 2. பட்டதாயிற்று. பிரபத்தியை வாசிகமாகவும் காயிக மாகவும் மானசீகமாகவும் அதுசந்திக்கலாம். என்னை நீ இரட்சிச்க வேண்டும்" என்று வாயினால் வேண்டுதல் வாசிகம். அஞ்சலிசெய்தல், காகாசுரனைப்போல் இரட்ச கப் பொருள் இருக்குமிடத்தே வருதல் காயிகம். திண் னிய அத்யவசாயம் கொள்ளுதல் மானசீகம். இவற். றுள் மானசீகமே சிறந்தது. அதுவே இங்கு உற்றது. நம் போலியர் உய்வதற்காக ஆழ்வார் பாசுரமிட்டுச் அருளிச் செய்து உள்ளார். இதனால் ஆழ்லாருடைய பிரபத்தி வாசிகம் என்று கொள்ளக் கடவதன்று. நம்பிள்ளை அருளிச் செய்த ஈட்டு ரீசூக்திகள்: இவர் (ஆழ்வார்) செய்த பிரபத்தியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா...... நற்கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கும் இரங்குமாப்போலே இவரை நினைத்து இப்பத்தும் கற்றார் பக்கலிலுல் ஈசுவரன் பிரசந்நனாம். விபீஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன் செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ? பிற பாசுரங்கள்: இந்த இரண்டு பதிகங்களைத் தவிர பிற பாசுரங்களில் வேங்கடம் எம்பெருமானது இருப்பிடம் என்று குறிப்பிட்டதைத் தவிர வேறு சிறப்பு இல்லை. இங்ஙனம் சடகோபரின் செந்தமிழை அ துசந்திக்கும். போக்கில் திருமலையப்பனை அநுபவித்து மகிழ்கின் றோம்.