பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்வியக்கவி காட்டும் திருமலைக் காட்சிகள் 303 مهمین వ அதன் உயர்ச்சியைக் கூறும்போது இக்காட்சிகள் தாமாக எழுகின்றன. துய்ய செம்பொற் கோயிற் சுடரெறிப்பக் கண்முகிழ்த்து வெய்யவன்தேர் மாஇடறும் வேங்கடமே -திருவே. மாலை. 8 Iதுய்ய-சுத்தமான சுடர்-ஒளி எறிப்ப-வீசுத லால்; மா-குதிரை) என்பதுடன் காட்சி தொடங்குகின்றது. திருக்கோயிலின் விமானம் பொன் மயமானது. அதன் சுடர் எம்மருங்கும் வீசி நிற்பதால் வெய்யோனின் தேரில் கட்டிய குதிரை களின் கண்கள் கூச்சமடைந்து கண்விழிக்க மாட்டாமல் கால்கள் இடறுகின்றன என்கின்றார். இதுவே மலையின் உயர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது. இராசிகளின் காட்சிகள்: பன்னிரண்டு இராசி களில் மேடம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ஒன்பது இராசிகளை மலை யின் உயர்வோடு பொருத்திக் காட்டும் கவிஞரின் மந்திர ஆற்றலைக் கண்டு வியக்கின்றோம். வாடப் பசித்த வரியுழுவை வாலாட்டி மேடத்தைப் பார்த்துறுக்கும் வேங்கடமே (16) (வரி உழுவை-வரிப்புலி, வாலாட்டுதல்-சினக. குறிப்பு: மேடம்-ஆடு உறுக்கும்-கோபிக்கும்) திருமலைச் சாரலில் பசியுடன் புலியொன்று திரிந்து கொண்டுள்ளது. அது வானத்தில் ஆட்டுக்கிட வடிவுள்ள மேடராசியைப் பார்த்துச் சீறுகின்றது. மேடத்தைப் பார்த்திருக்கும் வேங்கடமே என்ற பாடத்திற்குப் புலியா